tamilnadu

img

அரசியலுக்குள் நடக்கும் அரசியல்..?

பப்ளிக் - இந்தப் பெயரில் வரவிருக்கிறது ஒரு திரைப்படம்... தமிழில்தான். அறிமுக இயக்குநர் ரா.பரமன் இயக்கத்தில் சமுத்திரக்கனி, காளிவெங்கட் முதலானோர்  நடிப்பில் உருவாகிற இந்தப் படம் அரசியல் கட்சியில் இருக்கும் அடிப்படைத் தொண்டர்களைச் சுற்றி நடக்கும் கதை.  அதாவது, அரசியலுக்குள் நடக்கும் அரசியலைப் பேசும் படம் என்கிறார் இதன் இயக்குநர். கே.கே.ஆர். சினிமாஸ் தயாரிக்கும் இதில் டி.இமாம் இசையமைக்கிறார். சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன், காயிதே மில்லத், கம்யூனிஸ்ட் தலைவர்கள் ப.ஜீவானந்தம், பி.ராமமூர்த்தி, பாவேந்தர் பாரதிதாசன், கக்கன் என்று அசல் ஆளுமைகளின் படங்களை படத்தின் முதல் பார்வையில் நடிகர்களுக்கு பதிலாக வெளியிட்டிருக்கிறார்கள். இன்னும் ஒருபடி மேலே போய் இந்தப் படத்தில் வரும் காட்சிகள், சம்பவங்கள் அனைத்தும் நிஜம். இங்கு நடந்ததைத்தான் சொல்லியிருக்கிறோம். இதனால் யார் மனமாவது புண்பட்டால் நாங்கள் பொறுப்பல்ல என்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள். பெரியார் படம் விடுபட்டுள்ளதாகவும் ஒரு சர்ச்சை ஏற்பட்டுள்ளது.  சினிமாவில் சிலர் புதிது புதிதாகச் சிந்திக்கிறார்கள் என்று புரிந்துகொள்ளலாம். படம் வெளிவந்த பிறகுதான் சரியாகச் சிந்தித்திருக்கிறார்களா என்று தெரியவரும். காத்திருப்போமே.