tamilnadu

img

புதுச்சேரி பல்கலை.யில் பாலியல் குற்றச்சாட்டுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது போலீஸ் தடியடி - 24 பேர் கைது

புதுச்சேரி பல்கலை.யில் பாலியல் குற்றச்சாட்டுக்கு எதிராக  போராடிய மாணவர்கள் மீது போலீஸ் தடியடி - 24 பேர் கைது

புதுச்சேரி, அக்டோபர் 10 புதுச்சேரி மத்திய பல்கலைக்கழ கத்தில் தொடர்ச்சியாக நடைபெறும் பாலியல் வல்லுறவு சம்பவங்களுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது காவல்துறையினர் நள்ளிரவில் கொடூ ரமாக தடியடி நடத்தி 6 மாணவிகள் உட்பட 24 மாணவர்களை வலுக்கட்டா யமாக கைது செய்துள்ளனர். இச்சம்ப வம் புதுச்சேரியில் பெரும் அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் குற்றச்சாட்டுகள் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் காரைக்கால் கிளையில் ஏராளமான முது கலை மற்றும் ஆராய்ச்சி மாணவிகள் படித்து வருகின்றனர். கடந்த சில நாட் களுக்கு முன்பு மாணவி ஒருவர் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைர லானது. அதில், தன்னிடம் பேராசிரி யர் ஒருவர் ஆபாசமாக பேசி வருவதாக வும், நிர்வாண புகைப்படங்களை அனுப்ப சொல்லியும், அப்படி செய்யவில்லை என்றால் இன்டர்னல் மதிப்பெண் வழங்க மாட்டேன் என மிரட்டி பாலியல் தொல்லை கொடுப்பதாக அழுதபடியே பேசி இருந்தார். இதனைத் தொடர்ந்து, காரைக்காலை சேர்ந்த முன்னாள் கல்வி அமைச்சர் கம லக்கண்ணன் ஆடியோ ஆதாரங்களு டன், சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதனிடம் புகார் மனு அளித்துள்ளார்.  இதேபோல் காலாப்பட்டில் உள்ள பல்கலைக்கழகத்திலும், பேராசிரியர் மாதவைய்யா ஆராய்ச்சி கல்வி பயிலும்  மாணவி ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. மாணவர்களின் போராட்டம் இந்நிலையில், புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் தொடர்ச்சியாக மாணவிகள் மீதான பாலியல் குற்றச் சாட்டுகளை மூடி மறைக்கும் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரை கண்டித்தும், பல்கலைக்கழக காரைக் கால் வளாக தலைவர் மாதவைய்யா மீதும், மேலும் பாலியல் குற்றச்சாட்டு களில் ஈடுபட்டுள்ள பேராசிரியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத் தின் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வியாழக்கிழமை (அக்டோ பர் 9) மாலை பல்கலைக்கழக வளா கத்தில் கையில் கண்டன பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்று, துணை வேந்தர் அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் பல்கலைக்கழக துணை வேந்தர் பிரகாஷ் பாபு, பதிவாளர் ரஜினிஸீ குப்தானி மற்றும் நிர்வாக அதிகாரிகளை மாலை வரை சிறைப் பிடித்தனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பல்கலைக் கழக நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இரவு 8 மணிக்கு காவல்துறையினரும் போராட்டம் நடத்திய மாணவர் சங்கத் தலைவர் களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி னர். அப்போது கோரிக்கைகளை ஏற்பதாக பல்கலைக்கழக நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  அதனை எழுத்துப்பூர்வமாக எழுதித்  தரும்படி மாணவர் சங்கத் தலைவர்கள் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் வலி யுறுத்தினர். ஆனால் பல்கலைக்கழக நிர்வாகம் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்காததால், மாணவர்களின் போராட்டம் நள்ளிரவு வரை நீடித்தது. நள்ளிரவில் காவல்துறை அராஜகம் இந்நிலையில், மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து நடத்து

வர்களை கைது செய்யும் வேலையில் ஈடு பட்டது. காலாப்பட்டு காவல்நிலைய போலீ சார் நள்ளிரவு 2 மணியளவில் பல்கலைக் கழகத்திற்கு அத்துமீறி நுழைந்து, மாணவர்கள் மீது கொடூரமாக தடியடி நடத்தினர். பூட்ஸ் காலால் எட்டி உதைத்தும் தலைமுடியை பிடித்து இழுத்துச் சென்றும் மாணவிகள் என்று பாராமல் வலுக்கட்டாயமாக கைது செய்தனர். இதில் ஒரு சில மாணவர்களுக்கு காயங் களும் ஏற்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 6 மாணவி கள், 18 மாணவர்கள் என 24 பேரை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக கைது  செய்து காலாப்பட்டு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனால் பல்கலைக்கழக வளாகம் போர்க்களம் போல ஆனது. மேலும் பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம் நடத்துவதற்கு தடை விதித்தனர். கைது செய்யப்பட்ட மாணவிகள் 6 பேரை மட்டும் பரிசோதனைக்கு பிறகு வெள்ளிக்கிழமை (அக்டோபர் 10) காலையில் விடுவித்தனர். ஆனால், இந்திய மாணவர் சங்க தலைவர்கள், மாணவர்கள் என 18 பேரை விடுவிக்கக் கூடாது என பாஜக மாணவர் அமைப்பான ஏபிவிபி புதுச்சேரி காவல்துறைக்கு அழுத்தம் கொடுத்திருப்பதாகவும், குற்றச் சாட்டுக்கு உள்ளான பேராசிரியர்களை பாதுகாக்கும் வேலையில் ஏபிவிபி ஈடுபட்டு ள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மாணவர்களின் கோரிக்கைகள் இதனிடையே கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களை விடுவிக்கக்கோரியும், பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், பல்கலைக்கழக நிர்வா கத்திற்கு எதிராக மாணவர்கள் வெள்ளிக் கிழமையன்று இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். கொடும்பாவி எரிப்பு உள்ளிட்ட போராட்டங்களும் நடை பெற்றன. பல்கலைக்கழகத்தில் பாலியல் வல்லுறவு புகார் கமிட்டி அமைக்க வேண்டும், உள்ளகப் புகார் குழுவை முடக்கி குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நிலைப்பாட்டை கைவிட வேண்டும் என்பன  உள்ளிட்ட கோரிக்கைகளை மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். சிபிஎம் கண்டனம் - புகார் மனு மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும், பல்கலைக்கழக பேராசிரி யர் மீதான பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டை  விசாரிக்க கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலா ளர் எஸ்.ராமச்சந்திரன் தலைமையில் திமுக, விடுதலை சிறுத்தைகள் மற்றும் மாணவர் அமைப்புகளின் நிர்வாகிகள் வெள்ளிக்கிழமை புதுச்சேரி காவல்துறை முதுநிலை கண்காணிப்பாளர் கலை வாணனை சந்தித்து புகார் மனு அளித்த னர். இச்சந்திப்பின் போது மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கள் ஆர்.ராஜாங்கம், வி.பெருமாள், மாநிலக் குழு உறுப்பினர் வழக்கறிஞர் சரவணன், திராவிட முன்னேற்றக் கழக மகளிரணி அமைப்பாளர் காயத்ரி ஸ்ரீகாந்த், இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் ரெமி எட்வின், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் அரிமா தமிழன், பிரகாஷ், ரமேஷ், விக்னேஷ், ஜெயகுமார், முருகா, நாராயணன் ஆகியோர் உடன் இருந்தனர். மூடி மறைக்க முயற்சிப்பதா? பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில  செயலாளர் எஸ்.ராமச்சந்திரன், “மத்திய பல்கலைக்கழகத்தில் பாலியல் கொடுமை களுக்கு எதிராக மாணவர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவத்தன்று மாணவர்கள் நியாயம் கேட்டு பல்கலைக்கழக பதிவாளர் அலுவல கம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள னர். இப்போராட்டம் மாணவர்களின் நியாயமான போராட்டமாகும். போராடும் மாணவர்களை அழைத்துப் பேசாமல், பல்கலைக்கழக நிர்வாகம் குற்றச்சாட்டை மூடி மறைக்க, காவல்துறையை வைத்து மாணவிகள் மீது அடக்குமுறையை ஏவி உள்ளது” என்றார். “எனவே பல்கலைக்கழக பேராசிரியர் மீதான குற்றச்சாட்டை மூடி மறைக்க இத்தகைய அராஜகத்தை அரங்கேற்றி உள்ள பல்கலைக்கழக நிர்வாகத்தின் மீது  உரிய விசாரணை செய்யவேண்டும். போரா டும் மாணவர்களுக்கு காவல்துறை பாது காப்பு அளிக்க வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது எந்த சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது என காவல்துறை அதிகாரியை சந்தித்து வலியுறுத்தியுள்ளோம்” என்றார். மேலும் அவர் கூறுகையில், “பல் கலைக்கழக மாணவிகள் மீதான பாலி யல் அத்துமீறல்களை முறையாக விசாரிக்க உள்புகார் குழு (இன்டர்னல் கம்ப்ளெயின்ட்ஸ் கமிட்டி) அமைத்து சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க புதுச்சேரி காவல்துறை, பல்கலைக்கழ கத்திற்கு அறிவுறுத்த வேண்டும் என கோரி க்கை வைத்துள்ளோம். இனி வரும் காலங்களில் மாணவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை காவல்துறை மேற் கொள்ளும்போது, நெறிப்படுத்தப்பட்ட காவலர்களைக் கொண்டு செயல்பட வேண் டும் என வலியுறுத்தினோம்” என்றார். “போராடும் மாணவர்களுக்கு பாது காப்பு கொடுக்க வேண்டிய காவல்துறை ஏவல் துறையாக மாறக்கூடாது. புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பாலியல் அத்துமீறல் புகார்களுக்கு எதி ரான போராட்டங்களை மேலும் தீவிரப் படுத்தும் சூழலை புதுச்சேரி பல்கலைக்கழ கம் ஏற்படுத்தியிருப்பது கண்டனத்திற்கு ரியது” என்று ராமச்சந்திரன் கூறினார். (ந.நி)