தமிழக வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவ முதல்வர் சார்பில் பிரதமரிடம் மனு
சென்னை, ஜூலை 26- தமிழகத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு உதவுமாறு, பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்படுகிறது. பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அரியலூர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு வந் துள்ள பிரதமர் மோடியிடம் இந்த மனு வை அளிப்பது தொடர்பாக, முதல மைச்சர் ஸ்டாலின், தலைமைச் செயலா ளர் நா. முருகானந்தத்துடன் சனிக் கிழமை (ஜூலை 26) ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, பிரதமரி டம் அளிக்கப்படவுள்ள கோரிக்கை மனு இறுதி செய்யப்பட்டது. அப்போது மக்க ளவை உறுப்பினர் கனிமொழி கருணா நிதி மற்றும் முதலமைச்சரின் செயலா ளர்கள் உடனிருந்தனர். இந்த மனுவை தமிழக நிதி, சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பிரதம ரிடம் அளிக்கிறார். கடந்த ஜூலை 21 அன்று காலை நடைபயிற்சியின் போது திடீரென தலை சுற்றல் ஏற்பட்டதால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடந்த 6 நாட்களாக தொடர் சிகிச்சை யில் உள்ளார். மருத்துவமனையில் இருந்தபடியே அரசுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். முதலமைச்ச ருக்கு, இதயத் துடிப்பை சீராக வைக் கும் ‘பேஸ்மேக்கர்’ கருவி பொருத் தப்பட்டுள்ளது.