லத்தீன் அமெரிக்கா நாடுகளில் மக்களுக்கு நான்காவது தவணை தடுப்பூசி போடும் முதல் நாடாக சிலி இருக்கப் போகிறது. அடுத்த வாரத்தி லிருந்து, அதாவது ஜனவரி 10 ஆம் தேதியிலிருந்து இதை நாங்கள் துவங்குகிறோம் என்று அந்நாட்டின் ஜனாதிபதி செபாஸ்டியன் பினெரா அறிவித்துள்ளார். அதிகமான அளவில் தடுப்பூசியைச் செலுத்திய நாடு களில் சிலியும் ஒன்றாகும். 85 விழுக்காடு மக்களுக்கு இரண்டு தவணையும், 57 விழுக்காட்டினருக்கு மூனற்வது தவணையும் போடப்பட்டிருக்கிறது.
பத்து மடங்கு அதிகமான அளவில் சரக்குகளை மாற்றிக் கொள்ள முடியும் என்று ஈரான் துர்க்மெனிஸ்தானிடம் கூறியுள்ளது. தற்போது கச்சா எண்ணெய்யை ஈரான் துர்க்மெனிஸ்தானுக்கு வழங்குகிறது. அதற்கு மாற்றாக, இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்து கொள்கிறது. இந்தப் பரிமாற்றத்தை பத்து மடங்கு அதிகரிக்க முடியும் என்று ஈரான் பயணம் மேற்கொண்டு வரும் துர்க்மெனிஸ்தானின் துணை ஜனாதிபதி ரஷித் மெரிடோவிடம் தெரிவித்துள்ளனர்.
மீண்டும் மக்கள் ஆட்சிக்கு திரும்புவதற்கான முன்மொழிவுகளை மாலியில் அதிகாரத்தில் ராணுவத்தலைமை வெளியிட்டுள்ளது. மாலியி உள்ள நிலைமை பற்றி மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் உச்சி மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ள நிலையில்தான் ராணுவம் இதை அறிவித்திருக்கிறது. உச்சி மாநாட்டி ற்குப் பிறகு தங்கள் மீது தடைகள் விதிக்கப்படலாம் என்ற அச்சத்தின் காரணமாகவே ராணுவம் இத்தகைய முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.