tamilnadu

img

சிபிஎம் போராட்டம் மாபெரும் வெற்றி

சென்னை, டிச.9-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டத்தால் கே.பி.பார்க்  குடியிருப்பில் ரூ.1.50 லட்சம் பணம் கட்டாமல், சம்பந்தப்பட்ட மக்களை குடி யேறிட வாரியம்  அறிவிப்பு வெளி யிட்டுள்ளது. இதனை மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது. இதுகுறித்து கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா வெளியிட்டுள்ள அறிக்கை வரு மாறு:  எழும்பூர் சட்டமன்ற தொகுதி, 77 ஆவது வட்டம், கேசவப் பிள்ளை பூங்கா குடிசைப்பகுதி மாற்றுவாரிய அடுக்கு மாடி குடியிருப்புகளில் 15 ஆவது பிளாக் முதல் 35 வரையிலான பிளாக்கு களை இடித்து புதிய குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு, 864 வீடுகள் கடந்த மூன்று ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்படவில்லை. இக்குடியிருப்பில் குடியேற வேண்டிய மக்கள் தகர கொட்டகை களில் எவ்வித அடிப்படை வசதிகளு மின்றி தவித்து வந்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இம்மக்களின் வாழ்விட உரிமைக்காக பலகட்ட போரா ட்டங்களை தொடர்ச்சியாக மேற்கொ ண்டது. ஒருகட்டத்தில், குடியிருப்பு களில் குடியேறும் போராட்டத்தை நடத்தி யது. இதன்காரணமாக சட்டமன்றத் தேர்தலுக்கு முன் குலுக்கல் முறையில் குடியிருப்புகள் சம்பந்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்டன. ஆனால், புதிய குடியிருப்பில் குடியேற ரூ.1.50 லட்சம் தர வேண்டுமென அரசாணை போட்டனர். இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரியும் தொடர் இயக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபட்டு வருகிறது.

தமிழக அரசுக்கு நன்றி

கடந்த அதிமுக ஆட்சியில் குடியிருக் கும் மக்களிடம் ரூ.1.50 லட்சம் வசூ லிக்க போடப்பட்ட அரசாணையை ரத்து  செய்யக் கோரி 2021 டிசம்பர் 5, 6, 7 ஆகிய தேதிகளில் குடிசைமாற்று வாரிய குடி யிருப்புகளில் கிளர்ச்சிப் பிரச்சார இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது. இந்நிலையில், தமிழ் நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரி யம் கே.பி.பார்க் 864 குடியிருப்புகளில் சம்பந்தப்பட்ட மக்கள் எவ்வித கட்டண முமின்றி குடியேறுவதற்கு உத்தர விட்டுள்ளது. மேலும் இயக்கப்படாமல் இருந்த லிப்ட் இயக்கப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய தொடர் இயக்கத்தை கவனத்தில் கொண்டு தமிழக அரசு மேற்கொண்ட இந்நடவடிக்கைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். கேசவ பிள்ளை பூங்கா குடியிரு ப்பின் தரம் குறித்து அரசு அமைத்த வல்லு நர் குழு கொடுத்துள்ள ஆலோசனை களை ஏற்று கட்டிட குறைபாடுகள் முழுமையாக சரிசெய்யப்பட்டு மக்கள் பாதுகாப்போடு வசிப்பதற்கான குடியிருப்புகளாக இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

கே.பி.பார்க் குடியிருப்பை தரமற்ற முறையில் கட்டிய பி.எஸ்.டி. நிறு வனத்தின் மீது தமிழக அரசு மேற் கொண்ட நடவடிக்கைக்கு நீதிமன்ற த்தில் தடை பெற்றுள்ளனர். தமிழக அரசு தொடர்ந்து உரிய முறையில் நீதி மன்றத்தில் வாதாடி, பி.எஸ்.டி. நிறு வனத்தின் மீது சட்டரீதியான நடவடிக் கைகளை உறுதிப்படுத்திட வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் வீடுகளை  கட்டிக் கொடுக்காமல் காலம் தாழ்த்திய தோடு, எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் தகரக் கொட்டகைகளில் சுமார் மூன்றாண்டுகளுக்கு மேலாக மக்கள் வசிக்க வேண்டிய சூழலுக்கு உள்ளாக்கிய அனைத்துத்தரப்பு மீதும் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
 

;