tamilnadu

img

குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 வழங்குக ஓய்வூதியர் சங்க மாவட்ட மாநாடு கோரிக்கை

காப்பீட்டுத் திட்டக் குறைபாடுகளை நீக்க ஓய்வூதியர் சங்கம் வலியுறுத்தல்

கோவை, ஆக.30 - காசில்லா மருத்துவக் காப்பீட் டுத் திட்டத்தில் உள்ள குறைபாடு களை நீக்கி, அனைத்து ஓய்வூதி யர்களுக்கும் காப்பீட்டுத் திட் டத்தை அமல்படுத்த வேண்டும் என  தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் கோவை  மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள் ளது. கோவை ரயில் நிலையம் அருகேயுள்ள தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கக் கட்டடத்தில், தோழர்  ஆர். சீனிவாசன் நினைவரங்கத்தில் தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் 5ஆவது மாவட்ட மாநாடு நடைபெற்றது. மாவட்டத் தலைவர் எஸ். மதன் தலைமையில் நடைபெற்ற இம் மாநாட்டில், மாவட்ட இணைச் செய லாளர் கே. ஜானகி வரவேற்றார்.  வி.ஆர். சாந்தாமணி இரங்கல் தீர் மானம் வாசித்தார். மாநிலத் துணைத் தலைவர் என். அரங்க நாதன் தொடக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் கே. அருண கிரி வேலை அறிக்கையையும், பொருளாளர் பி. நடராஜன் வரவு- செலவு அறிக்கையையும் முன் வைத்தனர். ஒன்றிய அரசு நாடாளுமன்றத் தில் நிறைவேற்றிய ஓய்வூதியம் 2025 மசோதாவைத் திரும்பப் பெற்று, பழைய ஓய்வூதியத் திட் டத்தை அமல்படுத்த வேண்டும். தமி ழக முதல்வர் தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதியை நிறை வேற்ற வேண்டும். சத்துணவு, அங் கன்வாடி உள்ளிட்ட ஓய்வூதியர்க ளுக்குக் குறைந்தபட்சம் ரூ. 7,850  வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டது. புதிய நிர்வாகிகள் தேர்வு: முன்னதாக, சங்கத்தின்  மாவட்டத் தலைவராக எஸ். மதன்,  செயலாளராக கே. அருணகிரி, பொருளாளராக பி. நடராஜன், மாவட்ட துணைத் தலைவர்களாக எஸ். இளவரசு, கே. பழனிச்சாமி, டி. பொன்னையா, ஆர். காந்திமதி,  மற்றும் துணைச் செயலாளர்களாக  எம். ஏசையன், எஸ். பால கிருஷ்ணன், வி.ஆர். சாந்தாமணி, கே. ஜானகி ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநி லத் துணைத் தலைவர் கே. இள மாறன் நிறைவுரையாற்ற, எஸ். பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.