பள்ளி, கல்லூரி ஆசிரியர் சங்கங்கள் பங்கேற்பு
ஜூலை 9 பொது வேலை நிறுத்தம்
சென்னை, ஜூலை 6- பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும், புதிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 9 அன்று பொது வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. மத்திய தொழிற்சங்கங்கள், சம்மேளனங்கள் சார்பில் நடைபெறும் இந்த வேலைநிறுத்தத்தில் பள்ளி, கல்லூரி ஆசிரியர் சங்கங் கள் முழுமையாக பங்கேற்கின்றன. இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழ கத்தின் பொதுச் செயலாளர் சோ.சுரேஷ்குமார் விடுத்துள்ள அறிக்கையில், “தொழிலாளர் விரோத 4 சட்டத் தொகுப்பு களை கைவிட வேண்டும். நிரந்தர முறையில் பணி நியம னங்களை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி நடைபெ றும் வேலை நிறுத்தத்தில் முழுமையாக பங்கேற்பது என்று உயர்மட்டக்குழு கூட்டத்தில் முடிவெக்கப்பட்டுள்ளதாக தெரி வித்துள்ளார். இடைநிலை ஆசிரியர் சங்கம் ஜாக்டோ-ஜியோ முடிவின்படி, தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் ஜூலை 9 பொது வேலை நிறுத்தததில் முழுமையாக பங்கேற்போம் என்று சங்கத்தின் பொதுச் செயலாளர் சங்கர் விடுத் துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். டாஸ்மாக் சம்மேளனம் டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனமும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதாக அந்த சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கே.திருச்செல்வன் தெரிவித்துள்ளார். பாஜக காலூன்ற முடியாது!: அன்வர் ராஜா இராமநாதபுரம்: தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு அதிமுக அமைப்புச் செயலாளர் அன்வர் ராஜா அளித்த சிறப்பு நேர்கா ணலில், “தமிழகத்தில் பாஜக ஒருபோதும் காலூன்ற முடி யாது என்றும், அக்கட்சியின் தமிழகக் கனவு ஒருபோதும் ஈடேறாது” என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும், பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்தால் சிறுபான்மையின ரின் வாக்குகள் பெருமளவில் கிடைக்காது என்றும், கூட்டணி ஆட்சி அமைந்தால், அதில் செங்கமலையன், வேலுமணி போன்ற வர்களை வைத்து பா.ஜ.க. திட்டமிடுமா என்ற கேள்விக்கு, அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் அதிமுக தவிடுபொடியாகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். கிராம உதவியாளர் பணியிடங்கள் சென்னை: 2,299 கிராம உதவியாளர் காலியிடங்களை நிரப்ப மாவட்ட வாரியாக அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. செப்டம்பர் மாத இறுதிக்குள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்கா ணலை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிய திருத்தப் பட்ட வழிகாட்டி நெறிமுறைகள்படி 2,299 கிராம உதவியா ளர் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.