tamilnadu

img

கோவையை புறக்கணிக்கும் ரயில்வே நிர்வாகத்திற்கு எதிர்ப்பு

கோயம்புத்தூர், செப்.14 - தமிழகத்தில் அதிக வருவாயை ஈட்டித்தரும் கோவை மாவட்டத்தை ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து புறக் கணிப்பதைக் கண்டித்து தொடர் போராட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்ட த்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.  ரயில்வேத் துறையில் கோவை மாவட்டம் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து கோவையில் செப்.28, 29, 30 ஆகிய தேதிகளில் விழிப்புணர்வு பிரச்சாரக்கூட்டம் மற்றும் அக்.3 ஆம் தேதி போராட்டம் நடத்துவது தொடர்பான அனைத்து கட்சி ஆலோ சனை கூட்டம் கோவை காந்திபுரம் பகு தியில் உள்ள பெரியார் படிப்பகத் தில் செவ்வாயன்று நடைபெற்றது.  மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமை தாங்கினார். தபெதிதிக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன் முன்னிலை வகி த்தார். இக்கூட்டத்தில் திமுக, சிபிஎம், சிபிஐ, தபெதிக, மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பி.ஆர்.நடராஜன் எம்.பி., பேசுகை யில், ரயில்வே போராட்டக் குழுவை  கோவை மாவட்டத்தில் துவங்கி, அனைவரும் சேர்ந்து குரல் எழுப்பிய தால் தான் ரயில்வே துறையில் பல பணிகள் நடைபெற்றுள்ளன. சேலம் கோட்டம் ஒரே நாளில் வரவில்லை. தொடர்ச்சியான போராட்டத்தால் கிடைத்தது. இங்கு ரயில்வே இரட்டைப் பாதை அமைக்கும் பணிகள் நடக்கும் காலகட்டத்தில் 13 ரயில்கள் இருகூரிலிருந்த போத்தனூர் வழியாக இயக்கப் பட்டன. ஆனால், பணிகள் முடிந்து  2 ஆண்டுகள் ஆகியும் ரயில்கள் திருப்பிவிடப்படவில்லை. தொடர்ந்து  போராட்டங்கள் நடத்தியதன் விளை வாக 8 ரயில்கள் கோவை வழியாக திருப்பப்பட்டன. தற்போது திட்டமிட்டு சுமார் ரூ.700 கோடி செலவு செய்து அகல ரயில்  பாதை அமைக்கப்பட்டது. வாளை யாறு அருகே ரயிலில் யானைகள் சிக்கி விபத்து நடக்கிறது. இதில், தொழில்நுட்ப கோளாறுகள் இருந்தால் பொறியாளர்களை அழைத்து சோதனை செய்ய வேண்டும். குறிப்பிட்ட தூரத்தை கடக்கும் போது குறைவான வேக த்தில் ரயிலை இயக்க வேண்டும். அதற்காக ரயிலை ரத்து செய்யக் கூடாது என்று கடிதம்எழுதியுள்ளேன். கடந்த காலத்தை விட வலுவான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியுள்ளது.

ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டு, மூத்தோர் பயணத்திற்கான கட்டணச் சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது. கிணத்துக்கடவு, பொள்ளாச்சி ரயில் நிலையங்களை சேலத்துடன் இணைக்க வேண்டும். கடந்த காலங் களில் தென் மாவட்டங்களை இணை க்கும் வகையில் இயக்கப்பட்ட ரயில்கள் மீண்டும் இயக்கப்பட வேண்டும். மங்களூர் - பாலக்காடு இண்டர்சிட்டி ரயில் திட்டத்தை மேட்டுப்பாளையம் வரை நீட்டித்து அமல்படுத்தப்பட வேண்டும். மேலும், கோவையிலிருந்து ஏராளமான தொழிலாளர்கள் திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு பணிக்கு செல்கிறார்கள். இந்நிலையில், நாகர் கோவில் பயணிகள் ரயிலை விரைவு ரயிலாக மாற்றி, அந்த பகுதிகளில் நிறுத்துவதில்லை. ரயில்களை அங்கு நிறுத்த வேண்டும். இங்குள்ளவர்கள் தனியார் மயத்தை ஆதரிப்பவர்கள் அல்ல. கோவை புறக்கணிக்கப்படக் கூடாது என்பது தற்போதைய கோரிக்கையாக உள்ளது. 

கோவையை தனி கோட்டமாக அறிவிக்க வேண்டும் என்பது முக்கியமான கோரிக்கையாகும். தமிழகத்தில் இரண்டாவது அதிக வருவாய் கொடுக்கும் கோவையை தனி கோட்டமாக அறிவிக்க வேண்டும்” என்றார்.  முன்னதாக மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து தொடர் பிரச்சார இயக்கங்களை மேற்கொள்வது, தொடர்ந்து அக்டோ பர் 3 ஆம் தேதி பெரிய அளவி லான போராட்டத்தை நடத்துவது என இக்கூட்டத்தில் முடிவெடுக்கப் பட்டது.

;