tamilnadu

img

ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஆகஸ்ட்டில் முற்றுகைப் போராட்டம்

கோயம்புத்தூர், ஜூலை 26- தூய்மைப்பணிகளை அவுட்சோர்சிங் விடுவது உள்  ளிட்ட ஊழியர் விரோத நட வடிக்கைகளை எதிர்த்து சென்  னையில் நகராட்சி இயக்கு நர் அலுவலகத்தை முற்றுகை யிடுவது என தமிழ்நாடு அரசு  ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாநில ஒருங்கிணைப்புக்குழு முடிவெ டுத்துள்ளது. தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழி யர்கள் சங்க மாநில ஒருங்கி ணைப்புக்குழு கூட்டம் சம் மேளன உதவித்தலைவர் எம். பாலசுப்பிரமணியம் தலைமை யில் புதனன்று கோவையில் நடைபெற்றது. மாநில பொதுச்  செயலாளர் ஆர்.பாலசுப்ரமணி யம், பொருளாளர் கே.ரங்கராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  இதில், தூய்மைப்பணி மற் றும் இதர பிரிவு பணிகளை அவுட்சோர்சிங் தனியார்மய அரசாணை உத்தரவை தமிழக  அரசு திரும்பப் பெற வேண்டும்.  மாநகராட்சி, நகராட்சி, பேரூ ராட்சி நிரந்தர தொழிலாளர் களுக்கு ஓய்வுகால ஓய்வூதியம்  இதர பணப்பயன்களை கிடைக்க  செய்ய வேண்டும். 10 ஆண்டு களுக்குமேல் பணி செய்து வரும் அனைத்துப்பிரிவு தொழி லாளர்களை பணி நிரந்தர  செய்திட வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை அமல் படுத்த வேண்டும்.  பறிக்கப்பட்ட சரண்டர் ஊதி யத்தை வழங்க வேண்டும் என்  பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி ஆகஸ்ட்  மாதம் இறுதியில் சென்னை யில் நகராட்சி நிர்வாக இயக்கு நர் அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டம் நடத்துவது  என்று கூட்டத்தில் தீர்மானிக் கப்பட்டது.