tamilnadu

img

தோழர் தா.பாண்டியன் உருவப் படம் திறப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் தோழர் தா.பாண்டியன் படத்திறப்பு - புகழஞ்சலி கூட்டம் திங்களன்று (டிச.27) சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. தோழர் தா.பாண்டியன் உருவப்படத்தை கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு திறந்து வைத்தார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிபிஐ பொதுச்செயலாளர் து.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்,  திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் தலைவர்  கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக தலைவர் தொல். திருமாவளவன், முஸ்லீம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர்மொகிதீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.