tamilnadu

img

இன்று ஓணம்: 5 மாவட்டங்களுக்கு மட்டும் விடுமுறை

சென்னை, செப்.7- ஓணம் பண்டிகையையொட்டி தமிழ் நாட்டில் ஐந்து மாவட்டங்களுக்கு மட்டுமே அரசு விடுமுறை அறிவித் துள்ளது. கேரளா மக்களால் செப்.8 ஆம் தேதி  வியாழக்கிழமை ஓணம் பண்டிகை,   கோலாகலமாக கொண்டாடப்படு கிறது.  இந்த நிலையில் தமிழகத்தில் வசிக் கும் கேரள மக்களுக்கும் ஓணத்தை  வெகுவிமர்சையாக கொண்டாடு வதற்கு சென்னை, திருப்பூர், கோவை, கன்னியாகுமரி, நீலகிரி ஆகிய ஐந்து மாட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஈரோடு, திருவள் ளூர், காஞ்சிபுரம், செங்கற்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அரசு அறிவித்துள்ளதாக ஒரு நாளிதழ் செய்தி வெளியிட்டது. இது  நான்கு மாவட்ட ஊழியர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.  இதனையடுத்து, செங்கற்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆர்.எம்.இப்ரா ஹிம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட் டுள்ளார். அதில், ஓணம் பண்டி கையை முன்னிட்டு விடுமுறை அளிக் கப்படவில்லை. அன்றைய தினம் வேலை நாள் என்பதால் அனைத்து சார்நிலை அலுவலர்களும் தங்களது அலுவலக பணிக்கு வரவேண்டும் என்று அறிவித்திருக்கிறார். செங்கற்பட்டு மட்டுமின்றி ஈரோடு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் செப்.8  ஆம் தேதி ஊழியர்கள் அனைவரும் பணிக்கு வரவேண்டும்.