தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் லயன்ஸ் கிளப் சார்பில் தீபாவளியை முன்னிட்டு, பாபநாசத்தை அடுத்த கபிஸ்தலத்தில், மாற்றுத் திறனாளிகள், சிறுவர்கள் உள்ளிட்டோருக்கு புத்தாடை, இனிப்பு வழங்கப்பட்டது. இதில் பாபநாசம் லயன்ஸ் கிளப் தலைவர் ஜெகதீசன், செயலர் சிக்கந்தர், பொருளாளர் கணேசன், வட்டாரத் தலைவர் முத்தமிழ்ச் செல்வம், மாவட்டத் தலைவர் சாப் ஜான், பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
