tamilnadu

img

அக். 30 தேவர் ஜெயந்தி : முதல்வர் பங்கேற்கிறார்!

அக். 30 தேவர் ஜெயந்தி : முதல்வர் பங்கேற்கிறார்!

சென்னை: விடுதலைப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பிறந்த நாளும் நினைவு நாளும், ஒரே நாளில், அக்டோபர் 30 அன்று ‘ஜெயந்தி’ விழாவாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி இந்த ஆண்டு, அக்டோபர் 30 அன்று பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் 63-ஆவது நினைவு தினம்  மற்றும் 118-ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்படு கிறது. இதில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள் ளார். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தை ஆய்வு செய்த பிறகு அமைச்சர் ராஜகண்ணப்பன் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.