tamilnadu

அதிமுக எத்தனை கோஷ்டிகள் ஆனாலும் அனைத்தையும் பாஜகவே வழிநடத்தும் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் விமர்சனம்

அதிமுக எத்தனை கோஷ்டிகள் ஆனாலும்  அனைத்தையும் பாஜகவே வழிநடத்தும் சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் விமர்சனம்

கோபி, செப்.22 -  அதிமுக எத்தனை கோஷ்டிகளாக  பிரிந்தாலும் அனைத்து கோஷ்டி களையும் பாஜகவும் அமித் ஷாவும் வழிநடத்துவார்கள் என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் கடுமையாக விமர்சித்தார். ஈரோடு மாவட்டம் கோபியில் ஞாயிறு மாலை நடைபெற்ற விவசாயி கள் கருத்தரங்கத்தின் பின்னர் செய்தி யாளர்களிடம் பேசிய பெ.சண்முகம், அதிமுக-பாஜக உறவு குறித்து கடுமை யான விமர்சனங்களை முன்வைத்தார். பாஜகவின் கைப்பாவையான அதிமுக அதிமுக-பாஜக கூட்டணியை கூட்டணி என்று சொல்ல முடியாது என்று கூறிய அவர், “அதிமுகவில் ஒவ்வொரு கோஷ்டியும் தனித்தனி யாக தில்லி சென்று ஒன்றிய உள்துறை  அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து வருகின்றனர். எனவே பாஜகதான் அதிமுகவை வழிநடத்துகிறது என்ப தற்கு இதுவே எடுத்துக்காட்டு” என்றார். அதிமுக, பாஜகவின் கைப்பாவை யாக மாறிவிட்டதாக குற்றம்சாட்டிய அவர், “அதிமுக எத்தனை கோஷ்டி களாக பிரிந்தாலும் அத்தனை கோஷ்டிகளையும் வழிநடத்துவது பாஜகதான்” என்றார். சமீபத்தில் செங்கோட்டையன் தில்லி சென்று அமித் ஷாவை சந்தித் ததையும், பின்னர் எடப்பாடி பழனி சாமி அமித் ஷாவை சந்தித்ததையும் உதாரணமாக காட்டிய சண்முகம், “இனி டிடிவி எப்போது சென்று சந்திக் கிறார் என்பது மட்டுமே தெரிய வில்லை” என்று கூறினார். “எனவே அதிமுக எத்தனை  கோஷ்டிகள் ஆனாலும் அனைத்து  கோஷ்டிகளையும் பாஜகவும் அமித்  ஷாவும் வழிநடத்துவது அதிமுக வின் பரிதாபத்திற்குரிய மற்றும்  வருத்தத்திற்குரிய நிலைமை”  என்றும் குறிப்பிட்டார். ஜெயலலிதா காலத்துடன் ஒப்பீடு “மோடியா லேடியா என்று முழங்கிய ஜெயலலிதாவின் அதிமுக  இயக்கம் இன்றைக்கு ‘அண்ணன் அமித் ஷா என்ன சொல்கிறாரோ அதன் படிதான் நடப்போம்’ என்ற பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதைத் தான் இந்த தில்லி சந்திப்புகள் உறுதிப்படுத்துகின்றன” என்றார் பெ. சண்முகம்.