tamilnadu

img

பொறையாரில் புதிய சார் பதிவாளர் அலுவலக கட்டிடம் திறப்பு

பொறையாரில் புதிய சார் பதிவாளர்  அலுவலக கட்டிடம் திறப்பு

மயிலாடுதுறை, ஜூலை 18-  மயிலாடுதுறை மாவட்டம், பொறையாரில் ரூ.1 கோடியே 89 லட்சம் மதிப்பீட்டில் புதிய சார்பதிவாளர் அலுவலக கட்டடத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக புதனன்று திறந்து வைத்தார். பொறையாரில் 160 ஆண்டுகள் பழமையான சார்பதிவாளர் அலுவலகம் இயங்கி வந்தது. பழமையான சார்பதிவாளர் கட்டடம்  விரிசல் ஏற்பட்டு மழை காலங்களில் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்து வந்தது. பொதுமக்கள் பயன்பெறும் வகையில் புதிய கட்டடம் கட்டுவதற்கு நிர்வாகம் மற்றும் நிதித்துறையின் கீழ் ரூ.1 கோடியே 89 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு  கட்டடம் கட்டுமான பணி நிறைவு பெற்றது. தொடர்ந்து மயிலாடுதுறையில் புதன்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பொறையாரில் ரூ.1 கோடியே 89 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய சார் பதிவாளர் அலுவலகத்தை காணொலி வாயிலாக திறந்து வைத்தார். தொடர்ந்து, புதிதாக கட்டப்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்தில் முதல் பத்திரப்பதிவு தஞ்சை மண்டல துணை பதிவுத்துறை தலைவர் செந்தமிழ் செல்வன் தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட பதிவாளர் நிர்வாகம் அறிவழகன் உள்ளிட்ட அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.