tamilnadu

img

இன்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம்! 25 கோடி தொழிலாளர்கள் - விவசாயிகள் பங்கேற்பு

நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம்  தலித் அமைப்புகள் முழு ஆதரவு  தீண்டாமை ஒழிப்பு முன்னணி - தலித் அமைப்புகளின் மதுரை கருத்தரங்கம் உறுதி

மதுரை, பிப்.11 - மதுரையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் ஒருங்கிணைப்பில் தலித் அமைப்புகள் பங் கேற்ற அகில இந்திய பொது வேலை நிறுத்த ஆதரவு கருத்தரங்கம் நடைபெற்றது. அடித்தள உழைப்பாளி மக்களின் நலன்களை பாதுகாப்பதற்காக நடை பெறும் பிப்ரவரி 12 பொது வேலை நிறுத்தத்திற்கு முழு ஆதரவு அமைப்பதென முடிவு செய்யப்பட்டது.  சமூக நீதிக்கான போராட்டம்  ஒன்றிய பாஜக அரசு பின் பற்றும் நவீன தாராளமய பொருளாதாரப் பாதையும், தொழிலாளர் உரிமைகளை பறிக்கிற சட்டத் தொகுப்பு களும், கிராமப்புற வேலை  உறுதிச் சட்டத்தை சீர்குலைக் கிற முயற்சிகளும் அடித்தள உழைப்பாளி மக்களை குறிப்பாக பட்டியல் சாதி, பழங்குடி, மிகவும் பிற்படுத்தப் பட்ட சமூகங்களை கடுமை யாக பாதிக்கக் கூடியவை என்று கருத்தரங்கத்தில் உரையாற்றிய தலைவர்கள் குறிப்பிட்டனர். வளர்ச்சி அளவுகோல்கள் பல வற்றில் சாதிய பாகுபாடு களும் இணைந்து வெளிப் படுவது நவீன தாராளமயப் பாதையின் சமூக நீதிக்கு  விரோதமான உள்ளடக்கத் தை வெளிப்படுத்துவதே என்பதை அவர்கள் சுட்டிக் காட்டினர்.   கட்டற்ற தனியார் மயத்திற்கு வழிவகுக்கும் ஒன்றிய அரசின் கொள்கை கள் சமூக நீதி ஏற்பாட்டை பாதிப்பதோடு குறிப்பாக இடஒதுக்கீட்டு உரிமை யினை பறிக்கின்றன என்றும் கருத்தரங்கம் சுட்டிக்காட்டி யது. சாதி ஒழிப்பிற்கான பய ணம் ஒரு சேர சமூக, பொரு ளாதார தளங்களில் நடந்தேற வேண்டிய அவசியத்தையும் கருத்தரங்கம் அழுத்தமாக வலியுறுத்தியது. இத்தகைய பின்புலத்தில் பிப்ரவரி 12 அன்று நடைபெற இருக்கிற நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு முழுமையான ஆதரவை வழங்குவதோடு அதற்கான இயக்கங்களிலும் பங்கேற்பது என்று முடிவு செய்யப்பட்டது.  தலைவர்கள் பங்கேற்பு  இக்கருத்தரங்கம் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத் தலைவர் செல்லக்கண்ணு தலைமையில் நடை பெற்றது.  தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மதுரை புற நகர் மாவட்டச் செயலாளர்  செ.முத்துராணி வரவேற்று பேசினார். சிஐடியு மாநி லத் துணைப் பொதுச் செய லாளர் கே. திருச்செல்வன் துவக்கி வைத்து உரை யாற்றினார். ஆதித்தமிழர் பேரவை யின் மாநில செயலாளர் செல்வம், தமிழ்ப்புலிகள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பேரறிவாளன்,  திராவிடர் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் விடு தலைவீரன்,  அருந்ததியர் இளைஞர் முன்னணி தலை வர் எஸ்.டி. கல்யாணசுந்தரம்,  தியாகி இமானுவேல் பேரவை மாநிலதலைவர் வி.பி. வேல்முருகன்,  இந்திய தொழிற்சங்க மையம் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் இரா. லெனின் ஆகியோர் கருத்துரை வழங்கினர். மக்கள் விடுதலை கட்சி யின் தலைவர், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் சு. க. முருகவேல்ராஜன்  நிறைவுரையாற்றினார்.  வேலைநிறுத்த ஆதரவு தீர்மானத்தை தீண்டா மை ஒழிப்பு முன்னணியின் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் ம.பாலசுப்பிரமணி யம் முன்மொழிய, மக்கள் விடுதலை கட்சியின் மாநில செயலாளர் ரவி வழிமொழிந்தார்.   தீண்டாமை ஒழிப்பு முன் னணியின் மாநகர் மாவட்டச் செயலாளர் பி ஏ.மாரிக்கனி நன்றி கூறினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் எஸ். பூமிநாதன் மற்றும் முன்னணி யின் மதுரை புறநகர் மாவட்ட தலைவர் எம். கண்ணன், மாவட்ட பொருளாளர் மகா லிங்கம், மாநகர் மாவட்ட பொருளாளர் ஜான் மைக் கேல்  ஆகியோர் கலந்து கொண்டனர்.