tamilnadu

img

ஏழை மாணவர்களின் சட்டப்படிப்பு கனவை கலைப்பதாக உள்ளது தேசிய சட்டப் பல்கலை. பதிவாளரின் பாதகமான உத்தரவை திரும்பப் பெறுக! அமைச்சரிடம் பெ. சண்முகம் நேரில் முறையீடு

ஏழை மாணவர்களின் சட்டப்படிப்பு கனவை கலைப்பதாக உள்ளது தேசிய சட்டப் பல்கலை. பதிவாளரின் பாதகமான உத்தரவை திரும்பப் பெறுக!

அமைச்சரிடம் பெ. சண்முகம் நேரில் முறையீடு

ழ்நாடு தேசிய சட்டப்  பல்கலைக்கழக பதிவாளர் 08.07.2025 அன்று மாணவர் களுக்கும், பெற்றோர்களுக்கும் பாதகம் விளைவிக்கும் வகையில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் க. துரைமுருகன் அவர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், வியாழ னன்று (10.07.2025) நேரில் சந்தித்து முறை யிட்டார்.

ஏழைகள் சட்டம் படிப்பதில்  தடை ஏற்படுத்தும் சுற்றறிக்கை

தேசிய சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், மாணவர்கள் மொத்தக் கட்டணத்தையும் ஒரே தவணையில் செலுத்த வேண்டும், ஏற்கனவே பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர்களும் கண்டிப்பாக பெற்றோருடன் வர வேண்டும், இரண்டாம் ஆண்டு முதல் ஐந்தாம் ஆண்டு வரை படிக்கும் மாணவர்கள் உட்பட புதிதாக சேர்க்கை அவசியம், மாணவர்கள் அனை வருக்கும் உள்ளூர் பாதுகாவ லரின் முகவரி அவசியம் என்பன உள்ளிட்ட மாணவர்களுக்கு பாதக மான பல்வேறு உத்தரவுகள் இடம் பெற்றிருப்பதை, அமைச்சரிடம் சுட்டிக்காட்டினார்.

பட்டியல் - பழங்குடியின மாணவர்க்கும் நெருக்கடி

குறிப்பாக, அரசு கல்வி உதவித்தொகை பெறக் கூடிய பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்கள் உட்பட அனைவரும் முழுக் கட்டணத்தை முன்கூட்டியே செலுத்த வேண்டும் என்பது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல; இது ஏழை - எளிய மாணவர்கள் இனி சட்டப்படிப்பு படிப்பது என்பதை எட்டாக் கனியாக மாற்றிவிடும் என்பதை எடுத்துக்கூறியதோடு, தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழக பதிவாளரின் சுற்றறிக்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் முன்வைத்த இந்த கோரிக்கைகளை முழுமையாக கேட்டறிந்த சட்டத்துறை அமைச்சர் க. துரைமுருகன் இது சம்பந்தமாக பதிவாளரை அழைத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

முதுகலை ஆசிரியர் காலிப்  பணியிடங்களுக்கு விண்ணப்பம்

சென்னை : தமிழகத்தில் காலியாக உள்ள 1,996 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 12 வரை விண்ணப்பிக்கலாம்  என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை-1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை-1 ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பு எண்.02/2025 ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் https://www.trb.tn.gov.in வாயிலாக ஜூலை 10 அன்று வெளியிடப்படுகிறது. பாட வாரியான காலிப்பணியிட விவரங்கள் கல்வித் தகுதி, வயது மற்றும் விண்ணப்பம் செய்வதற்கான அனைத்து விவரங்களும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க ஜூலை 10 முதல் ஆகஸ்ட் 12 பிற்பகல் 5.00 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.