தேசிய திரைப்பட விருதுகள் சிறந்த தமிழ் திரைப்படம் “பார்க்கிங்”
புதுதில்லி, ஆக., 01- இந்திய சினிமாவின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் தேசிய திரைப்பட விருதுகளின் 71ஆவது சீசன், வெற்றியாளர்கள் பட்டியல் வெள்ளிக்கிழமை அன்று (ஆகஸ்ட் 1) மாலை புதுதில்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த விருது அறிவிப்பில் சிறந்த தமிழ் படமாக “பார்க்கிங்” படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. “பார்க்கிங்” திரைப்படம் சிறந்த திரைப்படமின்றி சிறந்த திரைக்கதை (ராம்குமார்), சிறந்த துணை நடிகர் (எம்.எஸ்.பாஸ்கர்) 3 பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது. சிறந்த நடிகர் : ஷாருக்கான் (ஜவான்), விகாரந்த் மாஸே (12 பெயில் - இந்தி) சிறந்த நடிகை : ராணி முகர்ஜி (மிஸ்டர் சட்டர்ஜி வெஸ் நார்வே) சிறந்த துணை நடிகை : ஊர்வசி (உள்ளொழுக்கு) சிறந்த இசை : ஜி.வி.பிரகாஷ் (வாத்தி - தமிழ்)
மற்ற மொழி சிறந்த விருது பெற்ற படங்கள் : மலையாளம் - உள்ளொழுக்கு கன்னடம் - கண்டீலு தி ரே ஆப் ஹோப் தெலுங்கு - பகவந்த் கேசரி பஞ்சாபி - கால் ஆப் எக்சைட்மெண்ட்