tamilnadu

img

இந்து கோவிலுக்கு சீர் கொண்டுவந்த இஸ்லாமியர்கள்

புதுக்கோட்டை செப். 5- புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் மதநல்லிணக்கத்தை வலுப்படுத்தும் வகையில் இந்து கோயில் குடமுழுக்கை முன்னிட்டு முஸ்லிம் ஜமாத்தார்கள் சீர் கொண்டு சென்ற நெகிழ்ச்சியான நிகழ்வு நடை பெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்க லத்தில் உள்ள பட்டவைய்யனார் கோயில் திருப்பணிகள் முடிந்து திங்கள் கிழமை  குடமுழுக்கு நடந்தது. இக்குடமுழுக்கு விழாக்குழு சார்பில் கீரமங்கலம் சுற்றியுள்ள கிராமங் களுக்கு விழாக் குழுவினர் நேரில் அழைப்பு கொடுத்திருந்தனர்.  இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை கீரமங்கலம் மேற்கு முஸ்லிம் பேட்டை ஜமாத்தார்கள் பள்ளிவாசலில் இருந்து காய், கனி, பட்டு உள்ளிட்ட ஏராளமான தட்டுகளுடன் நாட்டிய குதிரைகளின் ஆட்டம் மேள தாளம் வான வேடிக்கைகளுடன் நூற்றுக்கண க்கானோர் ஊர்வலமாக சீர்கொண்டு வந்தனர். கோயில் வளாகத்தில் செண்ட மேளம் முழங்க நூற்றுக்கணக்கா னோர் வரிசையில் நின்று மாலை அணி வித்து சந்தனம், கற்கண்டு கொடுத்து வரவேற்றனர். கோயில் மண்டபத்தில் அமர்ந்து சீர் பொருட்களுடன் பணமும்வழங்கினார்கள்.  இதேபோல காசிம்புதுப்பேட்டை ஜமாத்திலிருந்தும் சீர் கொண்டு வந்த னர். இந்து கோயில் குடமுழுக்கு விழா விற்கு இஸ்லாமியர்கள் சீர் கொண்டு போனது மதநல்லிணக்கத்தை வலுப் படுத்துவதாக அமைந்தது. . இதே போல கீரமங்கலம் சுற்று வட்டார கிராமங்களில் இருந்தும் பல்வேறு சமூகத்தினர் சீர்கள் கொண்டு வந்தனர். இதுபோன்ற நிகழ்வை அந்தப் பகுதியில் உள்ள அனைத்து சமூக மக்களும் காலம் காலமாக கடைப் பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

;