tamilnadu

img

முருகன் வழக்கு: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜூலை 26- தனது சிறை அறையில், சோதனை நடத்த எதிர்ப்பு தெரிவித்ததாக ராஜீவ் கொலை வழக்கு ஆயுள் கைதி முருகன் மீதான வழக்கை விரைவாக விசா ரித்து முடிக்க வேலூர் நீதிமன்றத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்  காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதி யாக வேலூர் சிறையில் உள்ள முருகனின் அறை யில், கடந்த 2020 ஆம் ஆண்டு சிறை காப்பாளர் உள்ளிட்டோர் சோதனை நடத்தினர். இந்த சோத னைக்கு எதிர்ப்பு தெரி வித்த முருகன், சிறை அதி காரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதாகக் கூறி, அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத் தல் உள்ளிட்ட ஐந்து பிரிவு களின் கீழ் முருகன் மீது  வழக்குப் பதிவு செய்யப் பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி முருகன் தரப் பில் சென்னை உயர்  நீதிமன்றத்தில் மனுத்தாக் கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது முருகன் தரப்பில் ஆஜரான வழக்கறி ஞர், “இந்த வழக்கில்  இன்னும் குற்றப்பத்திரிகை  தாக்கல் செய்யப்பட வில்லை”என்று தெரிவித் தார். இதற்கு மறுப்பு தெரி வித்த அரசு தரப்பு வழக்க றிஞர், “குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விட்டதாக” கூறினார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி, “முருகன்  மீதான வழக்கை விரைந்து  முடிக்க வேலூர் நடுவர்  நீதிமன்றத்திற்கு உத்தர விட்டு, மனுவை முடித்து வைத்து” உத்தரவிட்டார்.