tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

நெக்ஸ்ட் தேர்வு கூடாது: மா.சுப்பிரமணியன்

மாநிலங்களின் சுகாதாரத் துறை அமைச்சர்கள் கூட்டம் ஜூலை 14, 15 ஆகிய தேதிகளில் உத்தரகண்ட் மாநிலம், டேராடூ னில் நடைபெறவுள்ளது. இதில், தமிழகத்தின் சார்பில் நெக்ஸ்ட் தேர்வு முறையை அமல்படுத்தக் கூடாது, நீட் தேர்வு விலக்கு, கிண்டி தேசிய முதியோர் நல மருத்துவமனை திறப்பு, மருத்துவ இடங்களுக்கு பொது கலந்தாய்வு கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சரிடம் முன்வைக்க உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 

‘மன அழுத்தம் போக்கும் நிகழ்வு’

மதுரை காவல் சரகத்துக்குட்பட்ட உயர் அதிகாரிகளுடன் தமிழக காவல் துறை டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில் நடைபெற்ற சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டத்தில், உரிய காரணங்களோடு விடுமுறை விண்ணப்பிக்கும் காவலர்களுக்கு உடனடியாக விடுப்பு வழங்க வேண்டும் என்றும், அவ்வப்போது காவல் துறையினருக்கு மன அழுத்தம் போக்கும் வகையில் புத்துணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

‘மேகதாது திட்டத்தை முறியடித்திடுக!’

மேகதாது அணை கட்டப்படுமானால், காவிரிப் படுகைப்  பகுதிகள் பாலைவனம் ஆகி விடும். எனவே ஒன்றிய அரசு மேக தாது அணை கட்டும் திட்டத்திற்கு எந்தவிதமான அனுமதியும் வழங்கக் கூடாது. தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல்  செய்துள்ள வழக்கை விரைவுபடுத்தி, கர்நாடகா மேகதாது அணை கட்டும் திட்டத்தை முறியடிக்க வேண்டும் என மதிமுக  பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை மூலம் வலியுறுத்தி யுள்ளார்.

மூத்த குடிமக்கள் பராமரிப்பு நலச்சட்டம் அமல்

தமிழ்நாட்டில் அமல்படுத்தக் கோரி சி.குமார் என்பவர் வழக்கு  தொடர்ந்திருந்தார். மூத்த குடிமக்களுக்கான தேசியக் கொள்கை யையும் தமிழ்நாட்டில் அமல்படுத்த வேண்டும் என்று மனு தாரர் தெரிவித்திருந்தார். காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதி களில் வசிக்கும் மூத்த குடிமக்களின் விவரங்களை சேகரிக்க டிஜிபி அறிவுறுத்தியுள்ளதாக அரசு தரப்பு தெரிவித்தது. மூத்த குடி மக்கள் புகாருக்கு முன்னுரிமை தந்து, அதனை தீர்த்து வைக்க டிஜிபி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார் என்றும் அரசு தரப்பு குறிப்பிட்டுள்ளது.

பால் விற்பனையை ஊக்கப்படுத்த அறிவுறுத்தல்

பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் சென்னை தியாகராயர் நகர் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கத்தில் சனிக்கிழ மையன்று மாதாந்திர பால் அட்டை விற்பனை மற்றும் அதற்கு  பெறப்படும் அடையாள அட்டை நகல்களை ஆய்வு செய்தார்.  இணைய வழி பால் அட்டை விற்பனையை  ஊக்கப்படுத்து வதற்கான ஆலோசனைகளையும் அமைச்சர் வழங்கினார்.

பிரதமருக்கு முதல்வர் கடிதம்

பருத்தியின் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளதால் தமிழ்  நாட்டில் பருத்தி விவசாயிகள் மோசமான நிலையை எதிர் கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தற்போது தமிழ்நாட்டில் நஞ்சைத் தரிசுப் பருத்தி அறுவடை நடைபெறுவதால், பருத்திக் கொள்முதல் நடவடிக்கைகளை இந்திய பருத்திக் கழகம் உட னடியாகத் தொடங்கிட வேண்டுமென்றும், பருத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை ஜூன் 1-ம் தேதியில் இருந்து அமல்படுத்த வேண்டும் எனவும் ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தலைமை ஆசிரியர் பணியிடங்கள்

தமிழ்நாட்டில் உள்ள 1,000 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் பதவி உயர்வு மூலமாக இந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள தாகவும் பள்ளிக்கல்வித் துறை கூறியுள்ளது. இதன்படி, பணி யிடங்களை நிரப்புவதற்கு ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளான முதுகலை ஆசிரியர்களையும் அதுபோல 17ஏ, 17பி பிரிவுகளின் கீழ் தண்டனை பெற்ற ஆசிரியர்களை பரிந்துரைக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்டனை காலம் முடிவடை யாமல் உள்ள ஆசிரியர்களின் பெயர்களையும் பரிந்துரைக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

மின்மாற்றி கொள்முதலில் முறைகேடு

மின்மாற்றிகள் கொள்முதலில் அனைத்து ஒப்பந்த தாரர்களும் ஒரே விலைப்புள்ளியை குறிப்பிட்டதால் முறைகேடு கள் நடந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மானக் கழகத்தில் மின்மாற்றிகள் 5ஆண்டுகள் உத்தரவாதத்துடன் கொள்முதல் செய்யப்பட்டது. புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள கேரளா, ராஜஸ்தானில் 3 ஆண்டுகள் உத்தரவாதத்துடன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது என மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

ராகுலுக்கான தண்டனை கடுமையானது: ஆம் ஆத்மி 

“ராகுல் காந்திக்கு கொடுக்கப்பட்ட தண்டனை மிகவும் கடுமையானது. இதை முன்னரும் சொன்னோம். அரவிந்த் கெஜ்ரிவாலும் இதையேதான் கூறினார். உண்மையான பிரச்சனைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசைத் திருப்ப பாஜக பயனற்ற அரசியலில் ஈடுபடு கிறது. இது நிச்சயமாக தவறு. இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை நாங்கள் ராகுல் காந்திக்கு ஆத ரவு தெரிவிக்கிறோம்” என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைமை செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர் கூறியுள்ளார்.

வாரங்கல் பத்ரகாளி கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

ரூ. 6 ஆயிரத்து 100 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக, தெலுங்கானா வந்த பிரதமர் நரேந்திர மோடி, சனிக்கிழமையன்று வாரங்கலில் உள்ள பத்ரகாளி கோயிலில் வழிபாடு மேற்கொண்டார். பிரதமர் மோடியுடன் ஒன்றிய சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் புதிதாக நியமிக்கப்பட்ட தெலுங்கானா பாஜக தலைவர் ஜி. கிஷன் ரெட்டி உள்ளிட்டோரும் வழிபாடு நடத்தினர்.

பொது சிவில் சட்டம் குறித்து போலியான செய்திகள்?

“இந்திய சட்ட ஆணையத்துடன் தொடர்புடையதுபோல் சித்தரித்து சில தொலைப்பேசி எண்கள்  பொதுமக்களிடையே தவறாக பயன்படுத்தப்படுவது ஆணையத்தின் கவனத்துக்கு வந்துள்ளது. அந்த எண்களின் வாயிலாக பொது சிவில் சட்டம் குறித்து போலியாக அனுப்பப்படும்  மோசடி குறுஞ்செய்திகள், அழைப்புகள் அல்லது செய்திகளுக்கும் சட்ட ஆணையத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. சட்ட ஆணையத்தின் வலைத்தளம் மற்றும் பத்திரிகை தகவல் பணி யகம்(பிஐபி) உள்ளிட்ட அதிகாரப்பூர்வ வழிகளில் மட்டுமே மக்களுடன் சட்ட ஆணையம் தொடர்பு  கொள்கிறது” என்று 22-ஆவது சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது.

மிரட்டலால் மன்னிப்பு கோரிய ‘ஆதிபுருஷ்’ திரைப்பட வசனகர்த்தா

‘ஆதிபுருஷ்’ படத்தில் இந்து கடவுள்களை தவறாக சித்தரிக்கும் வகையில் வசனம் இருந்த தாக புகார் கூறப்பட்டது. இந்துத்துவா அமைப்புக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், வழக்கு களுக்கும் சென்றன. இதையடுத்து, ஆதிபுருஷ் வசனகர்த்தா மனோஜ் முந்தாஷிர் தனது விட்டர்  பக்கத்தில் கருத்து ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், “ஆதிபுருஷினால் மக்களின் உணர்வுகள் புண்படுத்தப்பட்டதை நான் ஏற்றுக்கொள்கிறேன். கூப்பிய கைகளுடன், எனது நிபந்தனையற்ற மன்னிப்பைக் கோருகிறேன். கடவுள் பஜ்ரங் பலி நம்மை ஒற்றுமையாக வைத்து, நமது புனிதமான சனாதனுக்கும், நமது மகத்தான தேசத்துக்கும் சேவை செய்ய பலம் தரட்டும்” என்று  குறிப்பிட்டுள்ளார்.

ஜூலை 12- நாடு முழுவதும் காங்கிரஸ் அமைதிப் போராட்டம்

ராகுல் காந்திக்கான 2 ஆண்டு சிறைத்தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது என்று  குஜராத் உயர் நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ள நிலையில், “ஜூலை 12 அன்று, அனைத்து  மாநிலத் தலைமையகத்திலும், மகாத்மா காந்தி சிலைகளின் முன்பாகவும், பெரிய அளவிலான ஒரு நாள் அமைதி போராட்டத்தில் ஈடுபட ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று மாநில  தலைவர்களுக்கு, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் கடிதம் எழுதியுள்ளார். “ராகுல் காந்தி தனியாக இல்லை. உண்மை மற்றும் நீதிக்கான போராட்டத்தில் கோடிக்கணக்கான காங்கிரஸ்காரர்களும் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளும் அவருக்கு ஆதரவாக உள்ள இந்த வேளையில், நாம் ஒன்றிணைந்து நிற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது” என்றும் வேணுகோபால் குறிப்பிட்டுள்ளார்.

நாற்று நட்டும், டிராக்டர் உழுதும் ராகுல் காந்தி உற்சாகம்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தில்லியில் இருந்து சிம்லா செல்லும் வழியில் ஹரி யானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தில் உள்ள மதினா கிராமத்தில் திடீரென காரை விட்டு  இறங்கினார். அங்கு வேளாண் பணிகள் செய்து கொண்டிருந்த விவசாயிகளிடம் கலந்துரை யாடினர். பின்னர் தனது பேண்ட்டை முழங்கால் வரை ஏற்றிவிட்டு, வயலில் இறங்கி நாற்று நட்டார். டிராக்டர் ஓட்டி உழவுப் பணியையும் மேற்கொண்டார். அப்போது மழைத் தூறல் விழுந்த நிலையில், அந்தத் தூறலையும் பொருட்படுத்தாமல் அவர் விவசாயிகளுடன் ஆர்வமாக பணியாற்றினார்.

அரசு பேருந்துகளின் வருகை, புறப்பாடு செயலி

சென்னை, ஜூலை 8- தமிழ்நாட்டிலுள்ள அரசு போக்கு வரத்து கழக பேருந்துகள் எந்தெந்த பேருந்து நிறுத்தத்துக்கு எப்போது வரும். அங்கிருந்து எப்போது  புறப்படும் என்ற தகவலை வழங்குவதற்காக போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.  இந்த தகவல்களை செல்போன் செயலி மூலம் அறிந்து கொள்ளும் வகை யில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இதற்காக சென்னை மாநகர போக்கு வரத்து கழகம் உள்பட தமிழகத்தில் உள்ள 7 போக்குவரத்து கழகங்கள் ஒப்பந்த புள்ளி கோரியுள்ளன.   இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:- சென்னை மாநகர போக்குவரத்து கழகம்  விழுப்புரம், கும்பகோணம், திருநெல் வேலி, சேலம், கோவை, மதுரை ஆகிய 7 போக்குவரத்து கழகங்களில் பேருந்து நிறுத்தத்துக்கு பேருந்துகள் வரும் நேரம், அங்கிருந்து புறப்படும் நேரம் ஆகியவை செல்போன் செயலி மூலம் பார்க்க ஏற்பாடு செய்யப்படும். இது அனைத்து பேருந்து நிலையங்கள் மற்றும் நிறுத்தங்கள் பேருந்து வழித் தடங்களில் பேருந்துகளின் வருகை, புறப்படும் நேரம் பற்றிய தற்போதைய போக்குவரத்து தகவல்களை வழங்கும் என்றனர்.

பள்ளி மாணவர்களின்  உடல்நலம் குறித்த  தகவல்கள் சேகரிப்பு 

சென்னை, ஜூலை 8- தமிழ்நாட்டிலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் உடல்நலம் குறித்து ஆய்வு செய்து தகவல்களை சேகரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து  ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட இயக்குநர் ஆர்த்தி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஒன்றிய அரசின் திட்டத் தின்கீழ் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உடல்நல சோதனை நடத்தப்படுகிறது. இதில் மாணவர்களை ஆசிரியர்களும், மாணவிகளை ஆசிரி யைகளும் மட்டுமே ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வின்போது மாணவ, மாணவிகளுக்கு ஏதேனும் உடல்நல பாதிப்பு கண்டறியப்பட்டால் தேவை யான சிகிச்சைகள் அளிப்பதற்கு அந்தந்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரி யர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

சென்ட்ரலில் ரயில்வே அமைச்சர் ஆய்வு

சென்னை, ஜூலை 8- சென்னை சென்ட்ரல்  ரயில் நிலையத்தில் ரயில்வே  அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார். நீராவி இன்ஜின் போன்று  வடிவமைக்கப்பட்ட மின்சார ரயில் இன்ஜினை ஆய்வு செய்தார்.
 

;