2026-28 ஆண்டுக்கான ஐ.நா பொருளாதார சமூக கவுன்சில் உறுப்பினராக 18 ஆவது முறையாக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஐ.நா-வின் 6 முக்கிய அமைப்புகளில் ஒன்றான பொருளாதார-சமூக கவுன்சில், பொருளாதாரம், சமூகம், சுற்றுச்சூழல் ஆகிய விவகாரங்களில் நீடித்த வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், 2026-28 ஆண்டுக்கான ஐ.நா பொருளாதார சமூக கவுன்சில் உறுப்பினராக 18 ஆவது முறையாக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக 2008 முதல் 2020 வரை 4 முறை இந்த கவுன்சிலில் இந்தியா இடம்பெற்றிருந்தது.