வயநாடு மக்களுக்கு மோடி அரசு துரோகம் இடது ஜனநாயக முன்னணி தில்லியில் போராட்டம்
வயநாடு நிலச்சரிவு பாதிப்பை, தேசியப் பேரிடராக அறிவிக்க காலம் தாழ்த்தியதுடன், மறுசீரமைப்புக்கும் உரிய நிதியை வழங்காமல் வயநாடு மக்களை வஞ்சித்த ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து, இடது ஜன நாயக முன்னணியின் வயநாடு மாவட்டக்குழு சார்பில், புதுதில்லி யில் நாடாளுமன்றம் அமைந்துள்ள ஜந்தர் மந்தர் வீதியில் போராட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடது ஜனநாயக முன்னணியின் தலைவர்கள் கலந்து கொண்ட இப்போராட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மக்களவை உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம், மாநி லங்களவை உறுப்பினர்கள் வி. சிவதாசன், ஜான் பிரிட்டாஸ் உள்ளிட்டோர் பங்கேற்று ஒன்றிய அர சுக்கு எதிராக கண்டனம் முழங்கினர்.
மாநில அரசின் மீது ஏற்றப்படும் நிதிச்சுமை இந்த போராட்டத்தில், ஆர். சச்சிதானந்தம் எம்.பி. பேசுகையில், “எதிர்க்கட்சிகள் ஆட்சி நடக்கும் மாநிலங்களை, ஒன்றிய அரசு மாற்றாந் தாய் மனப்பான்மையுடன் நடத்தி வருகிறது. வயநாடு பெரும் அழிவைச் சந்தித்தும் கூட, தேசியப் பேரிடராக அறிவிக்க மறுத்ததுடன், மறுசீரமைப்புக்கான நிதியையும் முறையாக வழங்காமல் வஞ்சித்துள் ளது. முழு நிதிச்சுமையையும் கேரள மாநில அரசின் மீதே சுமத்தியுள்ளது. வரியை வசூலிக்கும் ஒன்றிய அரசு, மாநிலங்களுக்கு உரிய பங்கை அளிக்க மறுக்கிறது” என்று குற்றம் சாட்டினார். மலிவான அரசியலை பாஜக கைவிட வேண்டும் “தமிழ்நாட்டிலும், புதிய கல்விக் கொள்கை, ‘பிஎம் ஸ்ரீ’ திட்டங்களை ஏற்கவில்லை என்பதற்காக, ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்திற்கான (SSA) நிதி ரூ. 2,152 கோடியை, தமிழ்நாட்டிற்கு வழங்காமல் முடக்கி வைத்துள்ளது.
படுமோசமான பழிவாங்கும் அரசி யலை ஒன்றிய அரசு செய்கிறது. மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது என்பதை உணரா மல் மலிவான அரசியலை மேற் கொள்கிறது. இது கண்டனத்திற்கு உரியது. ஒன்றிய அரசு தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். மாநிலங்களுக்கு உரிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். தில்லியில் இருந்து ஸ்ரீஆதித்யா