tamilnadu

img

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆடிப்பூரத் தேரோட்டம் அமைச்சர்கள் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆடிப்பூரத் தேரோட்டம்

அமைச்சர்கள் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்

திருவில்லிபுத்தூர், ஜூலை 28- விருதுநகர் மாவட்டம் திருவில்லி புத்தூரில் அருள்மிகு நாச்சியார் (ஆண்டாள்) திருக்கோயில் ஆடிப்பூரத் தேர்த்திருவிழாவை திங்களன்று அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மாவட்ட ஆட்சித்தலைவர் என்.ஓ.சுகபுத்ரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெ.கண்ணன், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சீனிவாசன், இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.தங்கப்பாண்டியன், சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் ஆகியோர் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். திருத்தேர் கோவிலைச் சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளிலும் உலா வந்தது. ஆடிப்பூரத்  தேரோட்ட விழாவிற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் சிறப்பான முறையில் செய்திருந்தன. ஆங்காங்கே கண்காணிப்பு கேமிரா பொருத்தி கண்காணிக்கப்பட்டது. கூட்ட நெரிசலை தவிர்க்க போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தி மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டிருந்தது. பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி மற்றும் சுகாதார வசதிகள் நகராட்சி நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.   இதில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ராஜேந்திரன், திருவில்லிபுத்தூர் நகர்மன்றத் தலைவர் தங்கம் ரவிக்கண்ணன், திருக்கோவில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், செயல் அலுவலர் உட்பட உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.