அகரஒரத்தூர் ஊராட்சியில் புதிய கட்டிடங்களை அமைச்சர் திறந்து வைத்தார்
நாகப்பட்டினம், செப்.27 - நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் கட்டப்பட்டுள்ள பல்வேறு கட்டடங்களை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சனிக்கிழமை திறந்து வைத்தார். நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம், அகர ஒரத்தூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், 15 மற்றும் 14 ஆவது நிதிக்குழு மானிய திட்டத் தின் கீழ் ரூ.42.65 லட்சத்தில் புதிதாக கட்டப் பட்டுள்ள கிராம செயலக கட்டடம், புதுச்சேரி ஊராட்சி விக்னாபுரம் கிராமத்தில் ரூ.42.65 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கிராம செயலக கட்டடம், ஆலங்குடி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.23.57 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம், கீழையூர் ஊராட்சி ஒன்றி யம் வேப்பஞ்சேரி ஊராட்சி நீடூர் காலனி தெருவில் அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.16.55 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டடம், விழுந்தமாவடி ஊராட்சி தென்பாதி கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15 ஆவது நிதிக்குழு மான்ய திட்டத்தின்கீழ் ரூ.60 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடங்களை அமைச்சர் அன்பில் மகேஸ் திறந்து வைத் தார். மாவட்ட ஆட்சியர் ப.ஆகாஷ், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌத மன், கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி. நாகை மாலி ஆகியோர் கலந்து கொண்ட னர்.
