tamilnadu

img

‘ஆட்டோ ஆப்’ தொடங்க நடவடிக்கை

சென்னை, செப்.14- ‘ஆட்டோ ஆப்’ தொடங்க நட வடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்  சர் சி.வி.கணேசன் தெரிவித்துள் ளார். ஆட்டோ மீட்டர் கட்டணம் 2013 ஆம் ஆண்டு மாற்றி அமைக்கப் பட்டது. கடந்த 8 ஆண்டுகளாக மீட்டர் கட்டணம் மாற்றி அமைக்  கப்படவில்லை. இந்த காலகட்டத்  தில் பெட்ரோல், எரிவாயு ஆகிய வற்றின் விலை பல மடங்கு உயர்ந்  துள்ளது. அதற்கேற்ப கட்ட ணத்தை மாற்றி அமைக்க தொழிற் சங்கங்கள் கோரி வந்தன. இந்நிலையில், சென்னை  உயர்நீதிமன்றம் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வுக்கு  ஏற்ப மீட்டர் கட்டணத்தை மாற்றி  அமைக்க உத்தரவிட்டது. இத னையடுத்து போக்குவரத்து இணை  ஆணையர் எஸ்.கே.எம்.சிவக்  குமரன் தலைமையில் அரசு பேச்சு வார்த்தை குழுவை அமைத்தது. இந்தக்குழு மே மாதம் ஆட்டோ  தொழிற்சங்கங்கள், நுகர்வோரு டன் ஆலோசனை நடத்தியது. இருப்பினும், கட்டணம் மாற்றிய மைக்கப்படுவது காலதாமத மாகி வந்தது. இந்நிலையில் செவ்வாயன்று  (செப்.13) அமைச்சர் சி.வி.கணே சனை, அனைத்து ஆட்டோ தொழிற்சங்கங்களின் கூட்டமைப்  பினர் சந்தித்து மனு அளித்தனர். அப்போது, கேரள அரசைப்  போன்று தமிழ்நாடு அரசும்,  ‘ஆட்டோ ஆப்’ உருவாக்க வேண்  டியதன் அவசியத்தை கூட்ட மைப்பின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.பாலசுப்பிரமணியம் உள் ளிட்டோர் எடுத்துரைத்தனர். மேலும்,  1.5 கிலோ மீட்டருக்கு 50 ரூபா யும், அடுத்து வரும் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கு 25 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்க வலியுறுத் தினர். அப்போது, “தனிநபர் சுரண்ட லில் இருந்து ஆட்டோ ஓட்டுநர் களையும், மக்களையும் பாது காக்க, ‘ஆட்டோ ஆப்’ தொடங்க  தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன. இது குறித்து முதல மைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று ஆப் தொடங்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

;