பாலியல் கல்வி பாடத்திட்டத்தை அமல்படுத்த மருத்துவ நிபுணர்கள் கோரிக்கை
உலக சுகாதார அமைப்பு வடிவமைத்துள்ள
சென்னை, ஜூலை 3- உலக பாலியல் சங்கத்தின் (World Association for Sexology) முக்கிய அங்கமான ஏசியா ஓசியானியா பெட ரேஷன் ஆஃப் செக்ஸாலஜி ( Asia-Oceania Federation of Sexology) அமைப்பின் துணைத் தலைவராக பாலியல் நிபுணர் டாக்டர் டி.காமராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாலியல் நலம், பாலியல் உரிமை கள், பாலியல் நீதி, ஆகியவற்றை மக்களின் அடிப்படை வாழ்வியல் தேவைகளாக, உரிமைகளாக கோடி க்கணக்கான மக்களின் ஆரோக்கி யமான உடல் நலம் கருதி மக்களுக்கு சேவை செய்ய இந்த அமைப்பு உலக அளவில் செயல்படுகிறது. இதுகுறித்து டாக்டர் டி.காமராஜ் மேலும் கூறியதாவது: பாலியல் மருத்துவத்தில் ஏற்படும் அறிவியல் முன்னேற்றங்களை பகிர்ந்து கொள்வதும், பாலியல் நிபுணர்களின் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து மக்களின் ஆரோக்கிய மேம்பாட்டிற்கு உதவுவதே இந்த அமைப்பின் நோக்க மாகும். பாலியல் நலம் என்பது பால் உறுப்பு கள் மற்றும் பாலியல் நடவடிக்கை தொடர்பான ஆரோக்கியம் பற்றியதா கும். பாலுறவு மூலம் பரவும் நோய்கள் தடுப்பு, தேவையற்ற கருவுறுதல், பாலு றவு சார்ந்து எடுக்கும் முடிவுகளில் அதிக கட்டுப்பாடு போன்றவையும் பாலி யல் நலத்தில் அடங்கும்.அதோடு பாலி யல் ரீதியான வன்முறை, கொடுமை களை தடுப்பதும் முக்கியம். போதைப்பொருள் புழக்கம் இந்தியா முழுவதும் இளம் வயதி னர் போதை பொருள் பயன்படுத்து வது சகஜமாக மாறி வருகிறது. இது சமூகத்திற்கு நல்லதல்ல. இதிலிருந்து மக்களை மீட்பதற்கு மருத்துவர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். பாலியல் உறவு குறித்த புரிதல், அறிவியல் மனப்பான்மை இல்லா தது இன்றைக்கு சமூகத்தில் நடக்கும் பல பாலியல் கொடுமைகளுக்கும், தொல்லைகளுக்கும், சீண்டல்களுக் கும் காரணம். ஆபாசப் படங்களுக்கு அடிமை யாகும் ஆண்களுக்கு ஆண்மைக் குறைவு ஏற்படும் அபாயம் அதிகரித் துள்ளது. அது மட்டுமல்ல கொரோனா பரவலுக்குப் பிறகு ஆண்களின் விந்தணு எண்ணிக்கையும் படிப்படி யாக குறைந்து வருகிறது. குழந்தை இல்லாதவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவது எதிர்கால மனித சமூகத்திற்கு சவா லாக அமையலாம். இவ்வாறு காமராஜ் கூறினார். பேட்டியின்போது உலக பாலியல் சங்கம் சார்பாக டாக்டர் கே.எஸ்.ஜெய ராணி கூறுகையில், பாலியல் கல்வி என்பது அசிங்கமானது என்று பலரும் தவறாக நினைத்துக் கொள்கிறார்கள். நம் நாட்டு கலாச்சாரத்திற்கு ஏற்ற மாதிரியும், அந்தந்த வயதுக்கு ஏற்ற மாதிரியும் வாழ்வியல், ஆரோக்கிய கல்வியை உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தயாரித்து உள்ளன. இந்த மாதிரியான கல்வியை சில நாடுகளில் அமல்படுத்தியுள்ளதால் அங்கு பாலியல் தொடர்பான குற்றங் கள் வெகுவாக குறைந்துள்ளன.எனவே, நம் நாட்டிலும் நமது கலாச் சாரத்திற்கு ஏற்றமாதிரி வடிவமைக் கப்பட்டுள்ள பாலியல் கல்வியை ஒன்றிய, மாநில அரசுகள் உடனே நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.
இறுக்கமான ஆடைகள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல
இறுக்கமான ஆடைகள், காற்றோட்டம் இல்லாத உடைகள் ஆண்களுக்கு நல்லதல்ல. அதிக வெப்பம் மிகுந்த இடங்களில் பணியாற்றும் ஆண்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம். இன்று பரவலாக எல்லா தரப்பிலும் ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் 70 கோடி மக்கள் இணையதளங்களை பயன்படுத்தி வருவதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இதில் மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. குழந்தைகள் ஆன்லைன் வழியாக துன்புறுத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இதனால் குழந்தைகளின் கற்றல் திறன் பாதிக்கப்படுவதோடு எதிர்காலமும் கேள்விக்குறியாக இருக்கிறது. இணைய தள வசதிகள் அதிகரித்து விட்டதால் பரவலாக ஆபாச படங்கள் பார்ப்பது அதிகரித்து விட்டது. இதனால் தேவையற்ற பாலியல் ரீதியான குழப்பங்கள், பிரச்சனைகள், சிக்கல்கள், பாலியல் சுரண்டல்கள் சிக்கல்கள் ஏற்பட்டு வருகிறது.