tamilnadu

img

பழுதான மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் மாதர் சங்க ஒன்றிய மாநாடு கோரிக்கை

பழுதான மின் கம்பத்தை சீரமைக்க வேண்டும் மாதர் சங்க ஒன்றிய மாநாடு கோரிக்கை

அரியலூர், ஆக.6 - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் 10 ஆவது ஒன்றிய மாநாடு ஜெயங் கொண்டம் குறுக்கு சாலையில் நடைபெற்றது.  ஒன்றியத் தலைவர் மீனாட்சி தலைமை  வகித்தார். முன்னாள் ஒன்றிய செயலாளர் பல்கீஸ் கொடியேற்றினார். பிஅமுதா அஞ்சலி உரையாற்றினார். முன்னதாக ஆர். தனம் வரவேற்றார். ஒன்றியச் செயலாளர்  பி.சிவசங்கரி வேலை அறிக்கையை வாசித் தார். வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.ரவீந்திரன் வாழ்த்துரை வழங்கினார். மாதர் சங்க மாவட்டத் தலைவர் பி.பத்மாவதி நிறை வுரையாற்றினார். செயலாளர் பி.சிவசங்கரி தொகுப்புரையாற்றினார்.  அனைத்து கிராமங்களுக்கும் நூறு நாள் வேலை வழங்கி, நகர்புறத்திற்கும் விரிவுப்படுத்த வேண்டும். வேலையை 200 நாளாக உயர்த்தி கூலி ரூ.600 வழங்க வேண்டும். மனு கொடுத்த அனைத்து பகுதி  ஏழை-எளிய மக்களுக்கும் இலவச வீட்டு மனை பட்டா வழங்கவும், நீர்நிலை புறம்போக்கு என்று கூறி ஏழை, எளிய  மக்களின் வீடுகளை இடிப்பதை கைவிட  வேண்டும். கொல்லாபுரத்தில் மேலத்தெரு வில் மின்கம்பம் பழுதடைந்து, மக்களுக்கு இடையூறாக உள்ள நிலையில், அதனை உட னடியாக சீரமைக்க வேண்டும் உள்ளிட்ட  பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் ஒன்றியத் தலைவராக ஆர்.ரோஸ்வள்ளி, செயலாளராக பி.சிவசங்கரி, பொருளாளராக டி.மீனாட்சி, துணைத் தலைவராக பி.அமுதா, துணைச் செயலாள ராக டி.சங்கீதா உள்ளிட்ட 15 பேர் கொண்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.