tamilnadu

img

திருவாரூரில் மாதர் சங்க மாநில மாநாட்டு கருத்தரங்கம்

திருவாரூரில் மாதர் சங்க  மாநில மாநாட்டு கருத்தரங்கம்

திருவாரூர், செப். 8-  சிபிஎம் திருவாரூர் மாவட்ட அலுவலக அரங்கத்தில் ஜன நாயக மாதர் சங்கத்தின் 17 ஆவது மாநில மாநாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கத்திற்க்கு மாவட்டத் தலைவர் கே. ஜெகதீஸ்வரி தலைமை வகித்தார். அமைப்பின் மாநிலக்குழு துணைச் செயலாளர் எஸ். தமிழ்செல்வி, வாலிபர் சங்கத்தின் மாநில செயலாளர் ஏ.வி. சிங்காரவேலன் ஆகியோர், பெருகி வரும் போதை கலாச்சாரமும், பெண்கள் மீதான வன்முறைகளும் என்ற தலைப்பில் கருத்துரையாற்றினர். நிகழ்ச்சியில், அமைப்பின் மாநிலக்குழு உறுப்பினர் பா.கோமதி, மாவட்டச் செயலாளர் ஜீ. கலைச்செல்வி, மாவட்டப் பொருளாளர் ஆர். நிர்மலா மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.