tamilnadu

எய்ம்ஸ், நெய்பர்,சர்வதேச விமான நிலையம் மதுரையின் கோரிக்கைகளை நிறைவேற்றுவாரா பிரதமர் மோடி?

மதுரை, ஜன.4- எய்ம்ஸை சுகாதாரத் துறையின் ‘கலங்கரை விளக்கம்’ என்று அழைத்தவர் வேறு யாரு மல்ல ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட வியாதான்.  எய்ம்ஸ் மீது மக்களுக்கு  நம்பிக்கை இருக்கிறது. அதனால்தான் மாநிலம் வாரியாக எய்ம்ஸ் மருத்துவனை வேண்டுமென்ற கோரிக்கை எழுந்தது. அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்று வதாகச் சொல்லி மக்களிடம்  ஆதரவைப் பெற்று விட எண்ணி , மதுரைப் பட்டணத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியே நேரடியாக வந்து  2019-ஆம் ஆண்டு ஜனவரி 27-ஆம் தேதி ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்.   அடிக்கல் நாட்டிய  பிரதமர் மோடி 2022-ஆம் ஆண்டு ஜனவரியில் மதுரைக்கு வருகிறார். மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டன.  இந்தத் தருணத்திலாவது ‘எய்ம்ஸ்’ மருத்து வமனை கட்டுமானப் பணிக்கான நிதி ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிட வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறி விக்கப்பட்ட உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையை கடந்த மாதம் 7-ம் தேதி பிரதமர் மோடி கலந்து கொண்டு திறந்து வைத்தார்.  2003 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட போபால், புவனேஸ்வர், ஜோத்பூர், பாட்னா, ராய்பூர், ரிஷி கேஷ் எய்ம்ஸ் மருத்துவமனைகள் 2012-2013-ஆம் ஆண்டுகளிலேயே செயல்பாட்டிற்கு வந்து விட்டன. உத்தரப்பிரதேச மாநிலம் ரேபேலி எய்ம்ஸ் மருத்துவமனை, மங்களகிரி (ஆந்திரா), நாக்பூர் (மகாராஷ்டிரா), பாத்யிண்டா (பஞ்சாப்), கல்யாணி (மேற்கு வங்கம்) ஆகியவையும் செயல்பாட்டிற்கு வந்துவிட்டன. இதன் பிறகு அறிவித்த மருத்துமவனைகளும் சேர்த்து இதுவரை நாடு முழுவதும் 18 எய்ம்ஸ் மருத்துவமனைகள் செயல்பாட்டிற்கு வந்துள் ளன.  ஆனால்  2015 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறி விக்கப்பட்ட மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை மட்டும் இன்றும் அந்த ஒற்றைச் செங்கல்லிலே நிற்கிறது.   2015-ஆம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் கட்ட ஒதுக்கீடு செய்வதாக அறிவிக்கப்பட்ட தொகை ரூ.1,264 கோடி மட்டுமே. கிட்டத்தட்ட ஏழாண்டுகள் ஆகிவிட்ட நிலையில்  ரூ,1,700 கோடி முதல் ரூ.2,300 கோடி தேவைப்படுமென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது

நெய்பர் நிறுவனம் 

எய்ம்ஸ் மட்டுமல்ல; நெய்பர் (தேசிய மருந்து சார் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்) மருத்துவ மனை தொடங்குவதிலும் தமிழகம் புறக்க ணிக்கப்படுகிறது. பஞ்சாப் (மொஹாலி), குஜ ராத் (அஹமதாபாத்), அசாம் (குவஹாத்தி), தெலுங்கானா (ஹைதராபாத்). கொல்கத்தா (மேற்குவங்காளம்), உத்தரப்பிரதேசம் (ரேப ரேலி) ஆகிய இடங்களில் நெய்பர் செயல்பட்டு வருகிறது. 2011- ஆம் ஆண்டு ஜனவரி 20- ஆம் தேதி நடைபெற்ற எட்டாவது நிதிக் குழு கூட்டத்தில், தமிழகத்தில் மதுரையில் நெய்பர் நிறுவ பரிந்து ரைக்கப்பட்டது. இதற்காக தமிழ்நாடு அரசு மதுரையில் 116 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது. இதற்குப் பிறகும் இந்தத் திட்டம் இப்போது வரை தொடங்கப்படாமல் உள்ளது.

சர்வதேச விமான நிலையம்  காலத்தின் கட்டாயம்

இந்தியா முழுவதும் 27 சர்வதேச விமான நிலையங்களில் 11 விமான நிலையங்களில் பயணம் செய்த மக்களின் எண்ணிக்கை மதுரை விமான நிலையத்தில் பயணம் செய்த எண் ணிக்கையை விடக் குறைவாக உள்ளது. மதுரையை மையமாக வைத்து சுற்றுலா வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஒவ்வொரு மாதமும் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விமானம் மூலம் மதுரையிலிருந்து பயணம் செய்கின்ற னர். தென் மாவட்டங்களில் உற்பத்தியாகும் வேளாண் விளைபொருட்கள் பல்வேறு நாடு களுக்கு ஏற்றுமதியாகின்றன. அதனால், சர்வ தேச விமான நிலையமாக மதுரையை அறி விப்பது காலத்தின் கட்டாயம் ஆகும். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர்-புறநகர் மாவட்டக்குழுக்கள் 23-ஆவது மாவட்ட மாநாட்டில் மதுரையின் மேற்கண்ட முக்கியப் பிரச்சனைகளை முன்வைத்து தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி திட்டமிட்ட அடிப்படையில் மதுரையில் தொழில் வளர்சி பெற வேண்டும். மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமானநிலையமாக மாற்ற வேண்டும். தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன (நெய்பர்) பணி களைத் தொடங்க வேண்டும். எய்ம்ஸ் மருத்துவ மனை கட்டுமானப் பணிகளை தொடங்க வேண்டுமென வலியுறுத்தி மதுரையில் ஜனவரி 7 அன்று (பழங்காநத்தம், ஜெயம் திரை யரங்கம் காலை பத்து மணி முதல் ஒரு மணி வரை பெருந்திரள் ஆர்ப்பாட்டத்திற்கு திட்ட மிட்டுள்ளன. இந்த ஆர்ப்பாட்டத்தில் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், தென் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர்கள் பங்கேற்கின்றனர். மதுரை மக்கள் நலன் சார்ந்த இந்தக் கோரிக்கைகளை வென்றெடுக்க மதுரை மாவட்ட உழைப்பாளி மக்கள், வர்த்தகர்கள், சமூக ஆர்வலர்கள், மதுரை மாவட்டத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்து குரல் கொடுப்போர், தொழிற்துறையினர்,  விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கவேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன் ஆகியோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.