tamilnadu

மரக்காணம் கழுவெளி 16ஆவது பறவைகள் சரணாலயம்

சென்னை, டிச. 10 - தமிழ்நாட்டின் 16ஆவது  பறவைகள் சரணாலயமாக மரக்காணம் கழுவெளி அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் – வானூர் வட்டத்தில் 5 ஆயிரத்து 151 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்துள்ளது கழுவெளி சதுப்பு நிலம். கடல் நீரும்,  நன்னீரும் சங்கமிக்கும் இடத்திற்கு அருகாமை யிலேயே ரம்மியமான சூழலில் காணப்படுகிறது. இந்தியா மட்டுமின்றி அயல் நாடுகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பறவைகள், இனப் பெருக்க காலத்தின் போது இப்பகுதிக்கு வந்து ஒன்று சேர்கின்றன. அந்த சமயங்களில் மிகவும் அழ காக காணப்படும் இந்த  கழுவெளி பகுதி. பறவை கள், அதிகளவில் வந்து செல்லும் இப்பகுதியை “பறவைகள் சரணாலயம்” ஆக அறிவிக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர் கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் கழு வெளி சதுப்பு நிலத்தை 16ஆவது பறவைகள் சரணாலயமாக தமிழக அரசு  அறிவித்திருக்கிறது. தமிழ்நாட்டில் புலிக் காட்டுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய ஏரி இதுதான்.  இந்த சதுப்பு நிலப்பகு தியை சுற்றி 220 ஏரி, குளம்  உள்ளிட்ட நீர் நிலைகள் உள்ளன.

இந்த கழுவெளி பகுதியில் ஆண்டு முழுக்க தண்ணீர் இருக்கும். இதனால் இங்கு அதிகள வில் மீன், நண்டு, இறால் போன்றவை வளர்கிறது. இந்த கழுவெளி பகுதியில் நிறைந்திருக்கும் தண்ணீ ரால் கடல் நீரும் உட்புகா தவாறு பாதுகாக்கப்படு கிறது, இதனால் இப்பகு தியில் விவசாயமும் செழிப்பாக நடைபெறு கிறது. கழுவெளி பகுதிக்கு பர்மா, பாகிஸ்தான், இலங்கை, இந்தோ னேசியா மற்றும் பல நாடுகளில் இருந்தும் உணவு மற்றும் இனப் ்பெருக்கத்திற்காக அதிக அளவில் பறவைகள் வந்து குவிகின்றன. கூளைக்கடா (பெலிக்கன்), பூ நாரை, மஞ்சள் மூக்கு நாரை, நத்தை குத்தி நாரை, அரி வாள் மூக்கன், கரண்டி மூக்கன், பாம்பு தாரை போன்ற பறவைகளை இங்கு அதிகம் பார்க்க முடி யும். குறிப்பாக அழிவின் விளிம்பில் உள்ள பறவை கள் கூட அதிக அளவில் இங்கு வருகின்றன. சரணா லயமாக அறிவிக்கப் ்பட்டதுடன் பறவைகளை பாதுகாப்பதற்கான முயற்சிகளை அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அருகாமை யில் உள்ள கிராம வாசி கள் கூறுகின்றனர்.

;