tamilnadu

img

தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்க! குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் சங்கம் கோரிக்கை

தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்க! குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் சங்கம் கோரிக்கை

கரூர், ஜூலை 19 - தமிழ்நாடு குடிநீர் வடி கால் வாரிய ஊழியர்கள் சங்கத்தின் கரூர் மாவட்ட 14 ஆவது ஆண்டுப் பேரவை சங்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில் சுங்ககேட்டில் உள்ள சங்க  அலுவலகத்தில் நடை பெற்றது.  சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி.முருகேசன் தலைமை வகித்தார். சிஐடியு கரூர் மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம் பேர வையை துவக்கி வைத்து பேசினார். மாவட்டச் செயலாளர் ஆர்.அரவிந்த் வேலை  அறிக்கையையும், மாவட்டப் பொருளா ளர் எஸ்.மோகன் வரவு, செலவு அறிக்கை யையும் முன்வைத்தனர். சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் எம்.சுப்பிரமணியன் வாழ்த்திப் பேசினார். தமிழ்நாடு குடிநீர் வடி கால் வாரிய ஊழியர் மத்திய அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் எம்.ஆத்ம நாபன் சிறப்புரையாற்றினார்.  480 நாட்கள் பணி செய்த தற்காலிக ஊழி யர்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.  நிலுவையில் உள்ள பணி நிரந்தரம் சம்பந்த மான வழக்குகளை உடனே முடிவுக்கு கொண்டு வர வேண்டும். மாதத்தின் முதல்  வாரத்தில் சம்பளம் வழங்க வேண்டும் என்பன  உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.  சங்கத்தின் மாவட்ட புதிய தலைவராக ஏ.அந்தோணிமுத்து, செயலாளராக ஆர்.அரவிந்த், பொருளாளராக எஸ்.மோகன் ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர். பிரதிநிதி கள் கியூபா ஒருமைப்பாடு நிதியாக ரூ.1360  வழங்கினர். சிஐடியு மாவட்ட மாநாட்டு  முதல் கட்ட நிதியாக ரூ.5 ஆயிரத்தை சிஐடியு  மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தத்திடம் வழங்கினர்.