tamilnadu

img

22 ஆண்டுகளாக பணியாற்றும் அனைத்து  ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்க! டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

22 ஆண்டுகளாக பணியாற்றும் அனைத்து  ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்க! டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

மயிலாடுதுறை, ஜூலை 6 - ஒருங்கிணைந்த நாகை மற்றும் மயிலாடு துறை மாவட்ட டாஸ்மாக்  ஊழியர் சங்க மாநாடு  ஞாயிறன்று மயிலாடு துறையில் நடைபெற்றது.  காமராசர் சாலை யில் உள்ள சிஐடியு அலு வலகத்தில் நடைபெற்ற மாநாட்டிற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.சிவக்குமார் தலைமை வகித்தார்.  மாவட்ட துணைச்  செயலாளர் வீ.கண்ணன் வரவேற்று பேசினார். மாநாட்டை துவக்கி வைத்து கீழ்வேளூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் நாகைமாலி உரை யாற்றினார். வேலை அறிக்கையை மாவட்டச் செயலாளர் சிவனருட் செல்வம், வரவு - செலவு அறிக்கையை  மாவட்டப் பொருளாளர் இராமலிங்கம் ஆகியோர் வாசித்தனர்.  தீர்மானங்கள், தொகுப்புரைக்கு பின் மாநாட்டை வாழ்த்தி சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் ப.மாரியப்பன், ஆர்.இராமானுஜம், கே.கே.தங்க மணி, எம்.கலைச்செல்வன், என்.வெற்றிவேல், எஸ்.ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் உரையாற்றினர். சங்கத்தின் புதிய மாவட்டத் தலைவராக பி.ராமலிங்கம், செயலாள ராக ஏ.சிவனருட்செல்வன், பொருளாள ராக என்.நாகராஜ், சிறப்புத் தலைவ ராக எஸ்.சிவக்குமார் உள்ளிட்ட 23 பேர்  கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப் பட்டது. டாஸ்மாக் நிறுவனத்தில் 22 ஆண்டு களாக பணியாற்றும் அனைத்து ஊழி யர்களையும் உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி பணி நிரந்தரம் செய்து கால முறை ஊதியம் வழங்க வேண்டும். நிலையாணை சட்டத்தை உடனடியாக அமலாக்க வேண்டும். இஎஸ்ஐ மருத்துவ திட்டத்தை அனைத்து ஊழி யர்களுக்கும் அமல்படுத்த வேண்டும். டாஸ்மாக் ஊழியர்களின் ஓய்வு பெறும்  வயதை 58-லிருந்து 60 ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  புதிய நிர்வாகிகளை அறிவித்து  மாநில பொதுச் செயலாளர் கே. திருச்செல்வம் நிறைவுரையாற்றினார். மாவட்டக் குழு உறுப்பினர். எம்.முனுசாமி நன்றி கூறினார்.