சிபிஎம் அலுவலகம் வந்த மஜக தலைவர்கள்
மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலத் தலைவர் மு. தமிமுன் அன்சாரி, மாநிலச் செயலாளர் ‘கலைக்குயில்’ இப்ராஹிம், மாநில துணைச் செயலாளர் பிஸ்மில்லா கான் ஆகியோர், சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்துக்கு வருகை தந்து, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணனைச் சந்தித்துப் பேசினர். அப்போது, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவர் - கேரள முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தன் மறைவுக்கு தங்களின் இரங்கலைத் தெரிவித்தனர்.