மகாகவி பாரதியார் 104 ஆவது நினைவு நாள் கருத்தரங்கம்
திருச்சிராப்பள்ளி, செப். 12- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க திருச்சி மாவட்டம் கைலாசபுரம் கிளை சார்பில், மகாகவி பாரதியார் 104 ஆவது நினைவு நாள் கருத்தரங்கம் வியாழனன்று பெல் சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு மாவட்ட துணைத் தலைவர் காளிராஜ் தலைமை வகித்தார். பாடகர்கள் பொன்னி, பகுத்தறிவன், இளையராஜா, யோகராஜ் ஆகியோர் பாடல்கள் பாடினர். கவிஞர்கள் சங்கரன், தேனி திருப்பதி, கண்ணன் ஆகியோர் கவிதை வாசித்தனர். `வெறுப்பின் கொற்றம் வீழ்க! அன்பே அறமென எழுக!’ என்ற தலைப்பில், மாநில துணைப் பொதுச் செயலாளர் களப்பிரன் சிறப்புரை ஆற்றினார். முன்னதாக, கிளை உறுப்பினர் உமா வரவேற்றார். அய்யப்பன் நன்றி கூறினார்.
