tamilnadu

img

மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் படகு சவாரிக்கு ஏற்பாடு செய்ய கோரிக்கை....

மதுரை:
மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் படகு போக்குவரத்து தொடங்க வேண்டுமென மதுரை மக்களும் சுற்றுலாப் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மன்னர் திருமலை  நாயக்கர்  தன்னுடைய அரண்மனை  கட்டுமானத்திற்க்கு மண் எடுக்கதோண்டப்பட்ட பள்ளம் இன்று மதுரை மாரியம்மன்தெப்பக்குளமாக காட்சியளிக்கிறது.  மதுரை மாவட்டத்தின் சுற்றுலாத்தலங்களில் ஒன்று என்ற பெருமையைப் பெற்ற மாரியம்மன் தெப்பக்குளம் இன்றுஅப்பகுதி குடிநீர் ஆதாரத்தை பெருக்குவதற்கு ஒரு முக்கிய இடமாகவும் உள்ளது. மாரியம்மன் தெப்பகுளம் 304. 8 மீட்டர்  நீள அகலம் கொண்டது.தெப்பக்குளத்தின் நான்குபுறமும் 12 நீள படிக்கட்டுகளும், சுமார் 15 அடிஉயரத்துக்கு கல்லினால் சுவரும் கட்டப்பட்டுள்ளது. இதன் நடுவிலுள்ள நீராழிமண்டபத்தில் தோட்டத்துடன்கூடிய விநாயகர் கோயில் ஒன்றும் உள்ளது. சுரங்கக் குழாய்களின்மூலமாக வைகையாற்றில் இருந்து  தண்ணீர் தெப்பத்திற்கு வருமாறு இணைப்பு கொடுக்கப்பட்டுள் ளது.  முல்லைப் பெரியாறு பகுதியில் மழை பெய்துவைகையாற்றில் தண்ணீர் அதிக அளவு திறக்கப்படுவதால் மதுரை வண்டியூர் மாரியம்மன்தெப்பகுளத்தில் தொடர்ந்து நீர் நிரப்ப வேண்டுமென பல்வேறு அமைப்புகள் மாவட்ட நிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்ததைத் தொடர்ந்து தண்ணீர் நிரம்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. படகுப்  போக்குவரத்து தொடங்கவேண்டுமென மதுரை மக்களும், சுற்றுலாப் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;