திருநங்கைகள் சாலை மறியல்
தூத்துக்குடி, டிச.12- தூத்துக்குடியில் தென்பாகம் காவல் நிலையம் எதிரே, திருநங்கைகள் சிலர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். தூத்துக்குடி மீனவர் காலனியைச் சேர்ந்த 20 வயது வாலிபர், அண்ணா நகர் 4வது தெருவில் திருநங்கைகள் சிலருடன் கடந்த சில நாட்களாக தங்கியிருந்துள் ளார். இதையறிந்த அந்த வாலிபரின் பெற்றோர், அவரை மீட்டு வெளியூருக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து திருநங்கைகள் அந்த வாலிபரின் வீட்டிற்கு சென்று தினமும் தொந்தரவு அளித்து வந்தார்களாம். இது குறித்து தென்பாகம் காவல் நிலையத்தில் வாலிபரின் பெற்றோர் புகார்அளித்தனர். இந்நிலையில், புகார் தொடர்பாக காவல்துறையினர் சனிக்கிழமையன்று திருநங்கைகளை விசாரணைக்காக அழைத்திருந்தனர். இதையடுத்து 5 திருநங்கைகள் காவல் நிலையத்திற்கு வந்தனர். அப்போது சம்பந்தப்பட்ட அந்த வாலிபரை தங்களுடன் அனுப்பி வைக்க வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தூத்துக்குடி - பாளை பிரதான சாலையில் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் திருநங்கைகளிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
டிச.15 முதல் திருச்செந்தூர் - பழனி ரயில் மீண்டும் இயக்கம் ஸ்ரீவைகுண்டம் மக்கள் ஏமாற்றம்!
தூத்துக்குடி, டிச.12- 2 வருடங்களுக்கு பின்னர் திருச் செந்தூர் - பழனி ரயில் வருகிற 15ம் தேதி முதல் இயக்கப்படவுள்ளது. ஆனால், செய்துங்கநல்லூர் - ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்தப்படாததால் பயணிகள் போ ராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். திருச்செந்தூர் - பழனி ரயில் பாசஞ்சர் ரயிலாக இயக்கப்பட்டு வந்தது. கொ ரோனா காலத்தில் இந்த ரயில் நிறுத்தப் பட்டது. தற்போது இந்த ரயில் டிசம்பர் 15 ம் தேதி விரைவு ரயிலாக இயக்கப்படுகிறது. இந்த ரயில் காலை 6.40 மணிக்கு பொள்ளாச்சியில் இருந்து கிளம்பி பழனி வழியாக 3.45க்கு திருச்செந்தூரை வந்தடைகிறது. மற்றொரு தடத்தில் மதியம் 12.50க்கு கிளம்பி இரவு 8 மணி ககு பொள்ளாச்சியை சென்றடைகிறது. இந்த விரைவு ரயில் திருச்செந்தூர் விரைவு ரயில் நின்று செல்லும் செய்துங்க நல்லூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய சந்திப்பு ரயில் நிலையத்தில் நின்று செல்லாது என ரயில்வே துறை அறிவித்துள்ளது. மேலும் இந்த ரயிலில் சாதாரண பய ணிகளுக்கான பெட்டியும் இணைக்கப்ப டவில்லை. இதனால் பயணிகள் வேதனை அடைந்துள்ளனர். இது குறித்து செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தலைவர் பார்வதி நாதன் கூறும் போது, செய்துங்கநல்லூர் ஸ்ரீவை குண்டம் ரயில் நிலையம் மிக முக்கிய ரயில் நிலையமாகும். இந்த இரண்டு ரயில் நிலையத்தில் கிராஸிங் ரயில்கள் நின்று செல்லும் வசதியும் உள்ளது. முன்பதிவு வசதியும் உள்ளது. திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் நிலை யத்திலும் நின்று செல்கிறது. அப்படி இருக்கும் போது செய்துங்க நல்லூரையும் ஸ்ரீவைகுண்டத்தினையும் புறக்கணிப்பது வேதனைக்குரிய விஜய மாகும். எனவே செய்துங்கநல்லூரில் டிசம்பர் 15-ம் தேதி ரயில் நிற்கவில்லை என்றால் பொதுமக்களை கூட்டி செய்துங்கநல்லூர் ரயில் நிலையில் பழனி ரயிலை மறிப்போம் என கூறியுள்ளார். இதுகுறித்து தூத்துக்குடி நாடாளு மன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி அவர்களுக்கு செய்துங்கநல்லூர் பஞ்சா யத்து சார்பாக தகவல் தெரிவிக்கப் ழுட்டுள்ளது. அவர் இதற்கு நடவடிக்கை எடுப்பேன் என உறுதி கூறியுள்ளார்.
மின்சாரம் பாய்ந்து கேபிள் டிவி ஆப்ரேட்டர் பலி
தூத்துக்குடி,டிச 12 தூத்துக்குடியில் மின்சாரம் பாய்ந்து கேபிள் டிவி ஆப்ரேட்டர் பரிதாபமாக உயிரிழந்தார். தூத்துக்குடி பிரையன்ட் நகர் மூன்றாவது தெருவை சேர்ந்தவர் சங்கரன்பிள்ளை மகன் விநாயக சுந்தரம் (44)கேபிள் டிவி ஆப்ரேட்டர். இவர் சனிக்கிழமை இரவு தூத்துக்குடி அண்ணா நகர் 2வது தெருவில் வீடுகளுக்கு கேபிள் இணைப்பு கொடுப்பதற்காக புதிய வயர்களை மின்கம்பத்தில் ஏறி மாட்டிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரதாவிதமாக அவரது உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதில் பலத்த காயம் அடைந்த விநாயக சுந்தரம், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.