tamilnadu

img

சீண்டிப்பார்க்க வேண்டாம்! பாஜகவுக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை, ஜூன் 15 - ‘திமுக-வினரைச் சீண்டிப் பார்க்க வேண்டாம்..’ என்றும், ‘தங்களுக்கும் எல்லா அரசியலும் தெரியும், இது மிரட்டல்  அல்ல, எச்சரிக்கை!’ என்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் காணொலிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது: செந்தில்பாலாஜி மேல் புகார் இருக்கும் என்றால், அது தொடர்பாக நீதிமன்றத் தீர்ப்பு இருக்கும் என்றால், அவரை அழைத்து விசாரணை  நடத்துவதை நான் தவறு என்று  சொல்லவில்லை. ஓடி ஒளியக் கூடிய அளவுக்கு அவர் சாதாரணமானவர் இல்லை! அவர், மக்களால் தேர்ந்தெடுக்க ப்பட்ட சட்டமன்ற உறுப்பினர். அதுவும் 5 முறை சட்டமன்ற உறுப்பினராக இருக் கிறார். அதுவும் இரண்டாவது முறையாக அமைச்சராக இருக்கிறார்.

நாள்தோறும் பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர். அப்படிப்பட்டவரை, ஏதோ தீவிரவாதி யைப் போல அடைத்து வைத்து விசாரிக்க என்ன அவசியம் இருக்கிறது? அமலாக்கத்துறை அதிகாரிகள் வந்தபோது, முழு ஒத்துழைப்பு தந்தார். எந்த ஆவணங்களை எடுத்திருந்தாலும், அது தொடர்பாக விளக்கமளிக்கத் தயார் என்று சொல்லி இருந்தார். அதற்குப் பிறகும் 18 மணி நேரமாக அடைத்து வைத்துள்ளனர். யாரையும் சந்திக்க அனுமதி இல்லை. இறுதியாக அவருக்கு உடல்நலம் முழுமையாக பாதிக்கப்பட்டு இதயவலி அதிகமான பின்னர்தான், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அதிலும் அலட்சியம் காட்டி இருந்தார்கள் என்றால், அது அவருடைய உயிருக்கே ஆபத்தாகி இருக்கும்! இப்படி ஒரு விசாரணையை மேற்கொள்ளும் அளவுக்கு அப்படி என்ன அவசரம்? அறிவிக்கப்படாத எமர்ஜென்சியில் நாடு இருக்கிறதா? அப்படித்தான் இருக்கிறது, அம லாக்கத்துறையின் நடவடிக்கை. எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால், பாஜக தலைமை, அமலாக்கத் துறை மூலமாக அவர்களது அரசியலைச்  செய்ய நினைக்கிறது. மக்களைச் சந்தித்து அரசியல் செய்ய பாஜக தயாராக இல்லை. பாஜக-வை நம்ப மக்களும் தயாராக இல்லை. மக்களுக்கான அரசியலை செய்தால்தான் மக்கள் பாஜகவை நம்புவார்கள். பாஜக-வின் அரசியலே மக்கள் விரோத அரசியல்தான்!

கருத்தியல் ரீதியாக, அரசியல் ரீதியாக, தேர்தல் களத்தில் எதிர்கொள்ள முடியாதவர்களை வருமானவரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ- என விசாரணை அமைப்புகளை வைத்து மிரட்டுவது பாஜக-வின் பாணி! அதுதான் அவர்களுக்குத் தெரிந்த ஒரே பாணி!  இந்த ஜனநாயக விரோத பாணியைத் தான் இந்தியா முழுமைக்கும் அவர்கள்  பின்பற்றி வருகின்றனர். ஒரே ஸ்கிரிப்ட்டைத்தான் வேறு வேறு மாநி லங்களில் டப்பிங் செய்து வருகிறார்கள். சிவசேனா எதிர்க்கிறதா? அந்தக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ரவத்தைக் கைது செய்ய வேண்டும். இது, மகாராஷ்டிரா! ஆம் ஆத்மி எதிர்க்கிறதா? தில்லி  மாநில அமைச்சர் மனிஷ் சிசோடியா வைக் கைது செய்ய வேண்டும். இது, தில்லி! ராஷ்ட்ரிய ஜனதா தளம் எதிர்க்கிறதா? பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்த வேண்டும்! இது, பீகார்! மேற்கு வங்கத்தில், மம்தா பானர்ஜி  பாஜக-வை எதிர்க்கிறார்களா, அவர்களது கட்சிக்காரர்களது இடங்களில் ரெய்டு நடத்த வேண்டும்! கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாரைக் கைது செய்தார்கள். அவர் மக்களைச் சந்தித்து, கர்நாடக தேர்தலில் வெற்றி பெற்று, இப்போது துணை முதல்வராகவே ஆகிவிட்டார்! முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தைக் கைது செய்தார்கள். தெலுங்கானாவில் அமைச்சருக்குத் தொடர்புள்ள இடங்களில் ரெய்டு! சத்தீஸ்கரில் முதலமைச்சர் தொடர் பான இடங்களில் ரெய்டு!

ஆனால், உத்தரப்பிரதேசத்தில், மத்தியப் பிரதேசத்தில், குஜராத்தில் எல்லாம் ரெய்டு நடத்தப்படாது. ஏனென் றால், அங்கே எல்லாம் ஆட்சியில் இருப்பது ‘உத்தமபுத்திரன்’ பாஜக. அந்த மாநிலங்கள் எல்லாம் வருமான வரித்துறைக்கோ, அமலாக்கத் துறைக்கோ, மத்தியப் புலனாய்வுத் துறைக்கோ தெரியாது. பாஜகவை எதிர்க்கிற அனைத்துக் கட்சிகளின் முக்கியப் பிரமுகர்கள் வீட்டுக்குள்ளேயும் பாஜக.,வின் துணை அமைப்புகள் ரெய்டு நடத்தி விட்டார்கள். அப்படி இல்லை என்றால், அதிமுக மாதிரி அடிமைகளை, இந்த விசாரணை அமைப்புகளைக் காட்டி மிரட்டி அடிபணிய வைத்து விடுவார்கள். பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்னர், முந்தைய பத்து ஆண்டுகளில் அம லாக்கத்துறை நடத்திய மொத்த சோத னைகளின் எண்ணிக்கை 112-தான். ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்த  பின்னர், பாஜகவின் எதிர்க்கட்சிக்காரர் களின் இடங்களில் மட்டும் 3000 ரெய்டுகளை நடத்தியிருக்கிறார்கள். இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டது என்னவோ வெறும் 0.05 விழுக்காடுதான்! மற்றபடி எல்லா ரெய்டுகளும் மிரட்டல், அரட்டல், உருட்டல்தான்.

இப்படி ரெய்டு, மிரட்டல்களுக்கு உள்ளானவர்கள் பாஜகவில் சேர்ந்த பின்னர் ‘புனிதர்கள்’ ஆகிவிடு கிறார்கள். அப்படிப்பட்ட ‘புனிதர்கள்’ மேல் வழக்குகள் எல்லாம் நிறுத்தப் பட்டிருக்கிறது என்று காங்கிரஸ் தலை வர்களில் ஒருவரான சசி தரூர் ஒரு பட்டியலையே போட்டிருக்கிறார்! ஏன் இங்கே இருக்கும் அதிமுக-வே அதற்கு ஓர் உதாரணம்தான். இந்த ரெய்டுகளின் உண்மையான நோக்கம் என்பது இதுதான். ஆனால், எல்லாவற்றையும் பார்த்தவர்கள் நாங்கள். எங்களுக்கு என்று தனித்த அரசியல் கொள்கை கோட்பாடுகள் இருக்கின்றன. மதவாதம் சாதியவாதம், சனாதனம், பிறப்பால் உயர்வு – தாழ்வு, மேல் - கீழ், இந்த மாதிரி யான மனித சமுதாயத்துக்கு விரோத மான பிற்போக்கு எண்ணங்களுக்கு எதிரானவர்கள் நாங்கள். இந்த சக்தி களை அரசியல் களத்தில் எதிர்கொள்வது தான் எங்களின் வழக்கம். வாதங்களுக்கு  வாதங்கள் வைக்கத் தயாராக இருக்கிறோம். அதை விடுத்து, மிரட்டிப் பணிய வைக்க நினைத்தால், குனிய மாட்டோம். நிமிர்ந்து நிற்போம்.! நேருக்கு நேர் சந்திப்போம்! இவ்வாறு மு.க. ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.