tamilnadu

img

சிபிஎம் திருவண்ணாமலை மாவட்ட செயலாளராக எம்.சிவக்குமார் தேர்வு

திருவண்ணாமலை, டிச.23-  மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருவண்ணா மலை  மாவட்ட 9ஆவது மாநாடு டிசம்பர் 21,22 ஆகிய தேதிகளில் திருவண்ணா மலை நகரத்தில்  நடை பெற்றது. மாநாட்டிற்கு பி.செல்வன், ஏ.லட்சுமணன், இ.லட்சுமி  ஆகியோர் தலை மை தாங்கினர். மாநாட்டைத் துவக்கி வைத்து மாநிலச் செயற்குழு உறுப்பினர் ஏ. லாசர் பேசினார். மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.பத்ரி வாழ்த்துரை வழங்கினார். இம்மாநாட்டில்  31 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. மாவட்டச் செயலாளராக எம். சிவக்குமார் தேர்ந்தெடுக் கப்பட்டார்.  மாவட்ட செயற் குழு உறுப்பினர்களாக  எம்.வீரபத்திரன், ப.செல்வன், எம்.பிரகலநாதன், இரா.பாரி, எஸ்.ராமதாஸ், கே. வாசுகி, ஏ.லட்சுமணன், என். சேகர் ஆகியோர்  தேர்ந் தெடுக்கப்பட்டனர். மாநாட் டை நிறைவு செய்து மாநி லக்குழு உறுப்பினர் என். பாண்டி பேசினார். வரவேற்பு க்குழு செயலாளர் எம்.பிரக லநாதன் நன்றி கூறினார்.

தீர்மானங்கள்

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளின் கரு ம்பு நிலுவைத் தொகையான 106 கோடி ரூபாயை பண் ணாரி சர்க்கரை ஆலை வழங் கிட வேண்டும். செய்யாற் றின் குறுக்கே 5 கி.மீ இடை வெளியில்,  ஒரு இடத்தில் தடுப்பணை அமைத்து, ஆற்று நீர் ஏரிகளுக்கு செல்ல நடவடிக்கை எடுக்கவேண் டும்,  மாவட்டத்தில் உள் வட்டங் களில் அரசு கலைக் கல்லூரி அமைக்கவேண் டும். ஆதியன், காணிக்கர், மலைக்குறவன், பன்னி யாண்டி இன மக்களுக்கு சாதிச் சான்று வழங்க வேண் டும். மாற்று சமூகத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ள 50 சதவீத பஞ்சமி நிலத்தை, மீண் டும் பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும். சாத்த னூர் அணையிலிருந்து மின் உற்பத்தியைதுவக்க வேண் டும். திருவண்ணாமலை நக ராட்சியில் பொதுமக்களிடம் குப்பை வரி வசூலிக்கும் செய லை கைவிட வேண்டும் என் பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

;