அறந்தாங்கியில் இலச்சினை வெளியீடு
மாணவர் சங்க புதுக்கோட்டை மாவட்ட மாநாடு
அறந்தாங்கி, ஜூலை 20- இந்திய மாணவர் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட 24 ஆவது மாநாடு ஜூலை 29 ஆம் தேதி அறந் தாங்கி கட்டுமாவடி சாலை இளங்கோ திருமண அரங்கில் நடைபெற இருக் கிறது. அதன் மாநாட்டு வரவேற்புக் குழு கூட்டம் மற்றும் இலச்சினை வெளி யிடும் நிகழ்ச்சி அறந்தாங்கி ரயில்வே பீடர் சாலையில் உள்ள வாலிபர் சங்க அலுவலகத்தில், மாணவர் சங்க மாவட்ட துணைத் தலைவர் கார்த்திகா தேவி தலைமையில் நடைபெற்றது. ஜூலை 29 ஆம் தேதி நடைபெற வுள்ள இந்திய மாணவர் சங்கத்தின் 24 ஆவது மாநாட்டு வரவேற்புக் குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவராக ஆர்.கர்ணா, செயலாளராக வசந்த், இணைச் செயலாளராக கோபால கிருஷ்ணன், பொருளாளராக அலா வுதீன் உட்பட 15 பேர் கொண்ட குழு தேர்வு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் மாநாட்டு இலச்சினை வெளியிடப்பட்டது. இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் சங்க நாராயணமூர்த்தி, வழக்கறிஞர் அலாவுதீன், வாலிபர் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் கர்ணா, மாணிக் கம், வாலிபர் சங்க ஒன்றிய நிர்வாகி கள் கோபாலகிருஷ்ணன், பாண்டி கௌதம், மாணவர் சங்க மாவட்ட நிர்வாகிகள் வசந்த், நந்தனா, சஞ்சய் பாரதி, மகாலெட்சுமி, கருணாகரன், ராகுல், காவியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருவைக்காவூர் கொள்ளிடம் ஆற்றிலிருந்து, வேதாரண்யம் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக நல்லூர் வழியாக, வேதாரண்யம் பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் பாபநாசத்தை அடுத்த நல்லூரில் உள்ள குடமுருட்டி ஆற்றின் மீது அமைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு, வாரக் கணக்கில் குடிநீர் வீணாகிறது. மேலும் குடிநீர் செல்லும் குழாய் பாசி படிந்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இதில் உடனே தலையிட அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.