tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

கார்கில் வெற்றி நாள்:  முதல்வர் மு.க.ஸ்டாலின் வீரவணக்கம்

சென்னை: கடந்த 1999 ஆம் ஆண்டு மே முதல் ஜூலை  வரை, லடாக்கின் கார்கில் மாவட்டத்திலும், எல்லை கட்டுப் பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்தியா-பாகிஸ்தான் இடையே  போர் நடைபெற்றது. அந்த ஆண்டு ஜூலை 26 ஆம் தேதி  போரில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த போரில் இந்திய  வீரர்கள் 543 பேர் வீரமரணமடைந்தனர். இந்த வெற்றியை  நினைவு கூறும் வகையில், போரில் வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களுக்கு மரியாதை செலுத்த ஆண்டுதோறும் ஜூலை 26 அன்று கார்கில் வெற்றி நாள் (கார்கில் விஜய் திவாஸ்)  நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.  கார்கில் வெற்றி நாளையொட்டி தலைவர்கள் பலரும் நினைவு கூர்ந்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளி யிட்டுள்ள பதிவில், “கார்கில் வெற்றி நாளில், நமது தாய் மண்ணை ஈடு இணையற்ற மன உறுதியுடன் காத்து, உயிர்நீத்த துணிச்சல்மிகு ராணுவ வீரர்களுக்கு என் வீர வணக்கங்கள். அவர்களின் வீரமும் தியாகமும் என்றும் நம்  நினைவை விட்டு நீங்காது” என குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் விளக்கம்

சென்னை: தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள் பயணமாக திருச்சி வந்துள்ள பிரதமர் மோடியை வரவேற்க முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் செல்லாதது ஏன்? என்பது குறித்து  தமிழ்நாடு செய்தி விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன் விளக்கம் அளித்துள்ளார். அதில், “உடல்நிலை சரி யில்லாத காரணத்தால் பிரதமரை வரவேற்க முதலமைச்ச ரால் செல்ல முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அமைச்சர் பதில்

புதுதில்லி:  ஒன்றிய சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சகத்திடம் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பி னர் ஆர்.சச்சிதானந்தம், ஜூன் 12 அன்று அகமதாபாத்தில் ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப் பட்ட இழப்பீடு குறித்து கேள்வி எழுப்பினார்.  இதற்கு பதில் அளித்துள்ள ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு, “ஏர் இந்தியா  விபத்தில் பலியானோருக்காக டாடா சன்ஸ் உருவாக்கிய  அறக்கட்டளையின் பதிவு கடந்த 18 ஆம் தேதி நிறை வடைந்துள்ளதாகவும், இறந்தவரின் நெருங்கிய உறவினர் களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையை  வழங்க உரிய ஆவணங்கள் சரிபார்ப்பு முறை தொடங்கப் பட்டுள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளதாகவும்” பதிலளித் துள்ளார்.

5 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு  நூதன தண்டனை

சென்னை: நீதிமன்ற அவமதிப்புக்கான தண்ட னையைத் தவிர்க்க, தமிழகத்தில் ஐந்து ஐ.ஏ.எஸ். அதிகாரி கள் முதியோர் இல்லங்கள், அனாதை இல்லங்களுக்குச் செல்லுமாறு உயர்நீதிமன்றம் நூதன தண்டனை வழங்கி உள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றில், ஐ.ஏ.எஸ் அதிகாரி கள் குமார் ஜெயந்த், பிரபாகர், ராஜாராமன், குமாரவேல் பாண்டியன் மற்றும் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் தாக்கல்  செய்த எழுத்துப்பூர்வ உறுதிமொழியின் உள்ளடக்கங் களைப் பதிவு செய்து, அதை நிறைவேற்ற, நீதிபதி பட்டு தேவானந்த், இரண்டு வார கால அவகாசம் வழங்கினார். நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ள, அவர்கள் முதியோர் இல்லங் கள், அனாதை இல்லங்களுக்குச் சென்று, அங்குள்ளவர் களுடன் நேரத்தைச் செலவிட உறுதி அளித்தனர். மேலும்,  தங்கள் தனிப்பட்ட நிதியிலிருந்து உணவு ஏற்பாடு செய்ய வும், அதிகாரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளனர்.

திருத்தம்

26.07.2025 அன்று 3 ஆம் பக்கத்தில் வெளியான செய்தியில் ‘சம்பள விதிகள் திருத்தச் சட்டத்தை  ரத்து செய்ய கோரி’ என்று தலைப்பிட்டு வந்துள்ளதை “ஓய்வூதிய  விதிகள் திருத்தச் சட்டத்தை” என்று திருத்தி வாசிக்கவும். தவறுக்கு வருந்துகிறோம்.

அபராதம் விதிப்பு

சென்னை: திருத்தணியில் இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் மீது பெண்ணை அமர வைத்து கொண்டு நெடுஞ்சா லையில் அட்டகாசம் செய்த இணையர்கள் குறித்த வீடியோ வைரலானது. அதைத் தொடர்ந்து,  விசாரணை மேற்கொண்ட போக்குவரத்து காவல் துறையினர் அவவர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.

அன்புமணி மீது புகார்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் ஒப்புதல் இல்லா மல் செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில்  நடைபெறும் நடைபயணம் விதிமீறல், கண்டிக்கத்தக்கது என்றும் வட தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெடுவதற்கு காரண மாக அமையும் இந்த பயணத்தில் பங்கேற்றவர்களை நீதிமன்றம்  முன்பு நிறுத்த வேண்டும். காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைமை நிலைய செயலா ளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மருத்துவப் பரிசோதனை கும்மிடிப்பூண்டி:

சிறுமி பாலியல் வன்கொ டுமை வழக்கில் ராஜூ பிஸ்வா என்ற வடமாநில  இளைஞரை காவல்துறையினர் கைது செய்து உள்ளனர். மேலும், அந்த இளைஞரிடம் விசா ரணை மேற்கொண்ட காவல்துறையினர், அவரை கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று மருத்துவ பரி சோதனைகளை மேற்கொண்டனர்.

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி  ரூ.15.5 கோடி  நிதி ஒதுக்கீடு சென்னை: ஒருங்கி

ணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின்கீழ் அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவிகளுக்கு தற் காப்பு கலை பயிற்சிகள்  அளிக்க ரூ.15.48 கோடி  நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. கராத்தே, ஜூடோ, தேக்வாண்டோ, சிலம்பம்  போன்ற பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு அளிக்கப்ப டும் பயிற்சிகள் வாயி லாக மாணவிகளுக்கு தன்னம்பிக்கை ஊட்டப் படுவதுடன் அவர்களு டைய பாதுகாப்புக்கும் இது உறுதுணையாக அமைகிறது. 6,045 அரசு நடு நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவி களுக்கு பயிற்சி அளிக்க  ரூ.7 கோடியே 25 லட்சத்து 40 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது. 5,804 உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகளில் படிக் கும் மாணவிகளுக்கு பயிற்சி அளிக்க ரூ.8  கோடியே 23 லட்சத்து  56 ஆயிரம் ஒதுக்கப்பட் டுள்ளது. வாரத்தில் 2  நாட்கள் வீதம் 3 மாதங் களுக்கு 24 பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். அனைத்து மாணவிகளுக்கும் இந்த  தற்காப்புக் கலை பயிற்சிகள் வழங்கப்பட  வேண்டும் என்று அறி வுறுத்தப்பட்டுள்ளது.

பதிலளிக்க உத்தரவு

சென்னை: கோவை, மருதமலையில் 184 அடி  உயர முருகன் சிலை  அமைக்கும் பணிகளை நிறுத்தக் கோரி வன விலங்குகள் ஆர்வலர் முரளிதரன் தாக்கல் செய்துள்ள மனு குறித்த விசாரணையில், வனத் துறை பதிலளிக்க வேண்டும் என்று  சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.