சென்னை, செப். 12- செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், தமிழகத்தில் உள்ள கிராமங்கள் முதல் நகரங்கள் வரை இளை ஞர்கள், மாணவர்களிடையே விளை யாட்டுப் போட்டிகள் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் திங்களன்று (செப்.12) நடைபெற்ற விழாவில், விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்குகின்ற 19 வீரர்கள், பயிற்றுநர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் நடுவர்களுக்கு முதலமைச்சர் விருதும் அதற்கான ஊக்கத் தொகை ரூ. 16 லட்சத்து 30 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வென்ற 1130 விளையாட்டு வீரர்களுக்கு உயரிய ஊக்கத் தொகையாக ரூ. 16 கோடியே 28 லட்சத்து 25 ஆயிரத்திற்கான காசோலைகளையும் வழங்கினார். பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேசு கையில், “உலக அளவில் விளை யாட்டுத் துறையில் தமிழ்நாடு முதன்மை பெற வேண்டும், நம் முடைய வீரர்கள் அனைவரும் சர்வதேச விளையாட்டுகளிலும் பங்கேற்க வேண்டும். பதக்கங்கள் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கவேண்டும் - என்ற உயரிய நோக்கத்தோடு தமிழ்நாடு அரசு இந்த நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறது” என்றார்.
தமிழர் திருநாளாம் தைத்திருநாள், கலையும் பண்பாடும் மட்டுமின்றி தமிழர்களின் விளையாட்டுகளும் கொண்டாடப்படும் பெருநாளாக அது அமையும். இந்தப் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் மாணவர்க ளுக்கு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடு திகளில் முன்னுரிமை அடிப்படையில் சேர்த்து, உயரிய பயிற்சிகள் வழங்க வும், தேசிய மற்றும் உலக அளவி லான போட்டிகளில் வெற்றி பெற தயார் செய்யவும் ஆணையிடப்பட்டி ருக்கிறது. நமது அரசின் சிறப்பான செயல்பாடுகளால் தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறையில் புதிய மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் கூறினார். சிலம்பம் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுக்களை ஊக்கப்படுத்து வதைப் போல தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியினர் விளையாட்டுக்கள் கண்டறியப்பட்டு அவற்றுக்கும் தகுந்த ஊக்கம் அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். களமாட விரும்பும் இளைய தலைமுறை வெற்றி வாகை சூட அனைத்து வழி வகைகளையும் தமிழ்நாடு அரசு நிச்சயமாக உருவாக்கித் தரும். நீங்கள் அடையும் வெற்றியும், பெருமையும் உங்களுக்கானது மட்டுமல்ல, தமிழ்நாடும், இந்தியாவும் அடையக் கூடிய வெற்றி. எனவே, உங்களது கடமையும் பெரிது, உங்களுடைய பொறுப்பும் பெரிது. அதை உணர்ந்து தடைகளை தகர்த்து, சாதனைகளை படைத்திடுங்கள் என்றும் கேட்டுக் கொண்டார்.