tamilnadu

img

ஜூலை 9 வேலை நிறுத்தம்: பனியன் தொழிலாளர்கள் பங்கேற்க அனைத்து தொழிற்சங்கங்கள் அழைப்பு

ஜூலை 9 வேலை நிறுத்தம்: பனியன் தொழிலாளர்கள் பங்கேற்க அனைத்து தொழிற்சங்கங்கள் அழைப்பு

திருப்பூர், ஜூலை 1- ஜூலை 9ஆம் தேதி நாடு தழு விய வேலை நிறுத்தப் போராட்டத் தில் அனைத்து பனியன் தொழிலா ளர்களும் முழுமையாகப் பங் கேற்று வெற்றி பெறச் செய்ய அனைத்து பனியன் தொழிலாளர் சங்கங்கள் அழைப்பு விடுத்துள் ளன. அனைத்து பனியன் தொழிற்சங் கங்களின் நிர்வாகிகள் கூட்டம் செவ்வாயன்று எல்பிஎப் பனியன்  சங்க அலுவலகத்தில் எல்பிஎப் பனி யன் சங்கத் தலைவர் ஜி.பாலசுப்பிர மணியம் தலைமையில் நடைபெற் றது. எல்பிஎப் பனியன் சங்க பொரு ளாளர் பூபதி, சிஐடியு பனியன்  தொழிலாளர் சங்கப் பொதுச் செய லாளர் ஜி.சம்பத், செயலாளர் துரை முருகன், ஏஐடியூசி பனியன் பேக் டரி லேபர் யூனியன் பொதுச் செய லாளர் என்.சேகர், ஐஎன்டியுசி பனி யன் சங்க செயலாளர் செந்தில்,  எச்எம்எஸ் மாவட்டச் செயலாளர் முத்துசாமி, எம்எல்எப் பனியன் சங்க செயலாளர் வெங்கடாசலம், டிடி எம்எஸ் பனியன் சங்க செயலாளர் மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  இதில், ஒன்றிய பாஜக மோடி  அரசின் தொழிலாளர் நலன்களுக்கு விரோதமாகள 44 சட்டங்களை நான்கு தொகுப்புக்களாக திருத்தம் செய்துள்ளதை திரும்பப் பெற வேண்டும். அனைத்து பனியன் தொழிலாளர்களுக்கும் 8 மணி நேர வேலைக்கு குறைந்தபட்ச ஊதி யம் மாதம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 17 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 9ஆம் தேதி நடைபெறும் பொது வேலை நிறுத்த போராட் டத்தில் அனைத்து பனியன் தொழி லாளர்களும் பங்கு பெற வேண்டும் என அனைத்து பனியன் தொழிற்சங் கங்கள் சார்பில் கூட்டாக அறை கூவல் விடுக்கப்பட்டது.  மேலும் வேலை நிறுத்தம் குறித்த கோரிக்கைகளை விளக்கி வரும் 5ஆம் தேதி சனியன்று காலை 8 மணிக்கு மாநகராட்சி சிக்னலில் துண்டறிக்கை கொடுத்து பிரச்சார இயக்கத்தை துவக்குவது. அன் றைய தினம் அனைத்து பனியன் தொழில் மையங்களிலும் முழு நாள் வேலை நிறுத்தத்தை விளக்கி வேன் பிரச்சாரம் மேற்கொள்வது என்றும் முடிவெடுக்கப்பட்டது.