tamilnadu

இனப்படுகொலை இஸ்ரேல் ஆட்சியாளர்களுடன் கைகோர்ப்பதா? ஸ்மோட்ரிச்சை மோடி அரசு வரவேற்பது வெட்கக் கேடானது!

இனப்படுகொலை இஸ்ரேல் ஆட்சியாளர்களுடன் கைகோர்ப்பதா ஸ்மோட்ரிச்சை மோடி அரசு வரவேற்பது வெட்கக் கேடானது

புதுதில்லி, செப். 9 - இஸ்ரேல் நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் தலைமையிலான குழு வினரின் இந்திய வருகைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு  தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்ப தாவது: தீவிரமான இன அழிப்பு, ஆக்கிரமிப்பு பேர்வழி இந்திய அரசாங்கத்துடன் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடு வதற்காக நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் தலைமையிலான இஸ்ரேல் நாட்டுக் குழுவினரின் இந்திய வருகை யை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கண்டிக்கிறது. ஸ்மோட்ரிச் ஒரு தீவிர வலதுசாரி  இனவெறிக் கட்சியைச் சேர்ந்தவர்.  பாலஸ்தீன மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி காசா பகுதியை நேதன் யாகு அரசாங்கம் ஆக்கிரமித்துள்ள நிலையில், அந்த அரசின் முக்கிய மான வழக்கறிஞராக இருப்பவர். ஆக்கி ரமிக்கப்பட்ட மேற்குக் கரையை இஸ்ரே லுடன் இணைப்பதற்கான திட்டங் களைத் தீட்டுவதிலும் முக்கியமான நபராக இருப்பவர். தடை விதிக்கப்பட்ட நபருக்கு இந்தியாவில் வரவேற்பா? பாலஸ்தீனர்களை இன அழிப்பு செய்வது உள்ளிட்ட அவரது ஆக்கிர மிப்பு கொள்கைகளின் விளைவாக, அவ ரைப் பல நாடுகள் தங்கள் நாட்டிற்குள் நுழைவதற்குத் தடை விதித்துள்ளன. வேறு பல தடைகளையும் விதித்துள் ளன. இவ்வாறு தடை விதித்த நாடு களில் இங்கிலாந்து, கனடா, ஆஸ்தி ரேலியா, நார்வே, நெதர்லாந்து, ஸ்லோ வேனியா மற்றும் நியூசிலாந்து ஆகி யவை அடங்கும். காசா மக்கள் ஒவ்வொரு நாளும் படு கொலை செய்யப்படும் நேரத்தில் மோடி அரசாங்கமானது, மோசமான நபரான பெசலெல் ஸ்மோட்ரிசை வரவேற்று இஸ்ரேல் அரசாங்கத்துடன் ஒப்பந்தங்  களில் கையெழுத்திடுவது வெட்கக் கேடானது. இது, நேதன்யாகு அரசாங்க த்துடன் மோடி அரசாங்கம் உருவா க்கிய ஆழமான மற்றும் வேரூன்றிய உறவுகளையும், காசாவில் நடந்து வரும் கொடூரமான இனப்படுகொலை யில் உடந்தையாக இருந்ததையுமே காட்டுகிறது. இஸ்ரேலுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்திடுக! இஸ்ரேலானது, உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டு பாலஸ்தீனப் பிரச்சனைக்கு நியாய மான மற்றும் அமைதியான தீர்வை நோக்கிச் செயல்படும் வரை, இந்திய அர சாங்கம் இஸ்ரேலுடனான அனைத்து வகையிலான ராணுவ, பாதுகாப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை ரத்து செய்ய வேண்டும் என்று அரசியல் தலைமைக்குழு கோருகிறது. இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கை யில் கோரியுள்ளது. (ந.நி.)