tamilnadu

img

கிறிஸ்துமஸ், புத்தாண்டு: 12 வகையான கேக் ஆவின் அறிமுகம்

சென்னை, டிச. 14- ஆவின் நிறுவனம் பண்டிகை காலங்களை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகை யில் ஒவ்வொரு பண்டிகையின் போதும் பல புதிய இனிப்பு வகைகள் மற்றும் பால் உப பொருட்களை அறிமுகம் செய்து வருகிறது. அதேபோல், கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கலை யொட்டி சிறப்பு கேக் வகை களான பிளாக் பாரஸ்ட் கேக், சாக்கோ ட்ரிபில், ஸ்ட்ராபெரி கேக்,  பைனாப்பில் கேக், ஒயிட் ஃபாரஸ்ட் கேக்,  பட்டர்ஸ்காட்ச் கேக், ரெயின்போ கேக், பிளாக் கரண்ட் கேக், ரெட் வெல்வெட் கேக், டெத் பை சாக்லேட் கேக், பிளம் கேக் ஆகியவை 800 கிராம்,  400 கிராம் மற்றும் 80 மி. கிராம்  அளவுகளில் ஆவின் பாலகங்க ளில் விற்பனை செய்யப்படுகிறது.  ரூ.70 முதல் ரூ.800 வரை பல்வேறு விலையில் இந்த தயாரிப்புகள் கிடைக்கும். விருகம்பாக்கத்திலுள்ள அதிநவீன ஆவின் பாலகத்தில் புதனன்று (டிச. 14) நடைபெற்ற நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கலந்து  கொண்டு இந்த 12 வகையான கேக்  வகைகளின் விற்பனையை தொடங்கி வைத்தார். மேலா ண்மை இயக்குநர்  ந.சுப்பையன், இணை மேலாண்மை இயக்குநர் கே.எம்.சரயு ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். ஆவின் கேக் வகைகள் மற்றும் சிறப்பு இனிப்புகளை மொத்தமாக ஆர்டர் செய்ய சென்னை தலைமை அலுவலகம்: 7358018395, சென்னை வடக்கு மண்டலம்: 9566860286, சென்னை மத்திய மண்டலம்: 9790773955, சென்னை தெற்கு மண்டலம்: 9444728505, கட்டணமில்லா எண:: 18004253300 மின்னஞ்சல் முகவரி: aavinspe cialorders@gmail.com என்கிற தொலைபேசி எண் கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி  வாயிலாக தொடர்பு கொள்ள லாம்.