tamilnadu

img

கவிநாட்டுக் கண்மாய் வரத்துக் கால்வாயில் கி.பி. 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டெடுப்பு

கவிநாட்டுக் கண்மாய் வரத்துக் கால்வாயில்  கி.பி. 6 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு கண்டெடுப்பு

புதுக்கோட்டை, ஜூலை 26-  புதுக்கோட்டை கவிநாட்டுக் கண் மாய் வரத்துக் கால்வாய் தூர்வாரும் பணிகளின் போது, கி.பி. 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான கல்வெட்டுப் பலகைத் தூண் கண்டெ டுக்கப்பட்டுள்ளது.  கவிநாட்டுக் கண்மாய் மற்றும் அதன் வரத்து வாரிகளைக் புதுக் கோட்டை சுதர்சன் கலை அறிவியல் கல்லூரி, வைரம் மெட்ரிக் பள்ளி மற்றும் மெகா பவுண்டேசன் இணை ந்து, இரு மாதங்களாக தூர்வாரும் பணி களை மேற்கொண்டு வருகின்றன. இந்தத் தூர்வாரும் பணிகளின் போது, சேந்தமங்கலம் அணையிலிருந்து கவிநாட்டுக் கண்மாய்க்கு நீர் வரும் வரத்துக் கால்வாயில், மேலபழு வஞ்சிக் கிராமத்திற்குத் தெற்கே எழுத்துப் பொறிப்புடன் கூடிய கற் பலகை ஒன்று இருப்பதாக இப்பணி களை ஒருங்கிணைத்து வரும் நிமல் ராகவன் தெரிவித்தார். இத்தகவலைத் தொடர்ந்து, சுதர்சன் கல்லூரி துணை முதல்வர் சுப. முத்தழகன் மற்றும் வரலாற்று ஆர்வ லர்கள் பா.முருகபிரசாத், நா.நாரா யணமூர்த்தி, மு.ராகுல்பிரசாத் குழு வினர் ஆய்வு செய்ததில், கல்வெட் டானது கி.பி. 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது எனக் கண்டறியப் பட்டுள்ளது. இதுகுறித்து பேராசிரியர் முத்தழ கன் கூறுகையில்,“இந்தக் கல்வெட்டா னது 4 அடி நீளமும், 2 அடி அகலமும் கொண்ட கற்பலகையில், ஒன்றரை அடிக்கு, ஒரு அடி செவ்வகமாக செதுக்கப்பட்டு, ‘ஸ்ரீ அலரிகூந்’ என்று பொறிக்கப்பட்டுள்ளது. இதனை ‘ஸ்ரீ அலரிகூன்’ எனப் பொருள் கொள் ளலாம். கல்வெட்டில் உள்ள எழுத்துக்க ளின் வடிவமைப்பைக் கொண்டு இந்த கல்வெட்டானது கி.பி 6ஆம் நூற்றாண் டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. கவிநாட்டுக் கண்மாயில் உள்ள கி.பி. 8 ஆம் நூற்றாண்டை சேர்ந்த மாறன் சடையன் காலமடைக் கல்வெட்டே இதுவரை பழமையானதாகக் கரு தப்பட்ட நிலையில், இந்தக் கல் வெட்டானது கண்மாயின் வரலாற்றை மேலும் இரு நூற்றாண்டுகள் பழமை மிக்கதாக மாற்றியுள்ளது. கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள ‘அலரிகூன்’ என்பவர், இப்பகுதியை ஆண்ட குறுநில தலைவராக இருக்க லாம். அவர் சேந்தமங்கலம் அணை  அல்லது இந்த வரத்துக் கால்வாயை வெட்டி, தெற்கு வெள்ளாற்றில் இருந்து  கவிநாட்டுக் கண்மாய்க்கு நீர்வரத்தை உருவாக்கி தந்திருக்கலாம் என கரு தப்படுகிறது. ஏனெனில் புதுக் கோட்டை மாவட்டத்தில் ஆரியூர், அன்னவாசல், ஒடுக்கூர் பெரியகுளங்க ளில் இது போன்று பெயர் பொறித்த கல் தூண்களை நாம் காண முடிகிறது.  கிட்டத்தட்ட 1,118 ஏக்கர் பரப்ப ளவு கொண்ட புதுக்கோட்டை மாவட் டத்தின் மிகப்பெரிய நீர்நிலையான கவிநாட்டுக் கண்மாயானது சுமார் 1,400 ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்து வருவது இக்கல்வெட்டு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.