tamilnadu

4,848 செவிலியர்கள் நியமனம்

சென்னை,டிச.19- கிராம சுகாதார சேவையை மேம்ப டுத்த புதிதாக 4848 செவிலியர்கள் நியமிக்கப் படவுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணி யன் தெரிவித்துள்ளார். மாநில  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ் வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கிராம சுகாதார சேவையை மேம்படுத்த புதியதாக 4,848 செவிலியர்கள் மற்றும் 2,448 சுகாதார ஆய்வாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். நலவாழ்வு மையங்களில் தற்காலிக அடிப்படையில் செவிலியர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதில் செவிலி யருக்கு மாத ஊதியம் ரூ14,000 மும், சுகாதார  ஆய்வாளருக்கு ரூ.11,000 மும் வழங்கப்பட உள்ளது. கோவிட்-19 நோய்த்தொற்றில் பணியாற்றியவர்களுக்கும், உள்ளூரில் பயின்றவர்களுக்கும் முன்னுரிமை அடிப் படையில் பணிவழங்க வழிகாட்டுதல்கள் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ளது. மாநில அளவில், சமூக நீதியை காக்கும் வகையில் பணிநியமனங்கள் செய்வதில் அவரவருக்குரிய இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் கடைப்பிடிக்கப்படும் 69 சதவிகித இடஒதுக் கீட்டு முறையைக் கடைப்பிடித்து நலவாழ்வு மையங்களில் சுகாதார ஆய்வாளர்கள் 2,448  பேரும், இடைநிலை சுகாதார பணியாளர்கள் 4,848 பேரும் ஆக மொத்தம் 7,296 பேரும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இவ்வாறு தெரிவித்தார்.

;