tamilnadu

இந்திய மாணவர் சங்க மாநில மாநாடு திருப்பூரில் பேரணியுடன் இன்று தொடக்கம்

இந்திய மாணவர் சங்க மாநில மாநாடு திருப்பூரில் பேரணியுடன் இன்று தொடக்கம்

திருப்பூர், ஆக. 21 - இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில 27-ஆவது மாநாடு திருப்பூரில் பல்லாயிரக்கணக்கான மாண வர்கள் பங்கேற்கும் பேரணியுடன் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.  திருப்பூர் ராயபுரம் ரவுண்டானா அருகில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சங்கமிக்கும் மாண வர்கள் பேரணி தொடங்குகிறது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஸ்ரீ சக்தி தியேட்டர்  அருகில் தோழர் என். சங்கரய்யா நினைவுத் திடலை பேரணி சென்றடை கிறது. அங்கு நடைபெறும் மாநாட்டுப் பொதுக் கூட்டத்தில் சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன் எம்.பி., மாணவர் சங்கத்தின் அகில  இந்தியத் தலைவர் ஆதர்ஸ் எம். சாஜி பொதுச்செயலாளர் ஸ்ரீஜன் பட்டாச்சார்யா உள்பட மாநில நிர்வாகிகள் உரை யாற்றுகின்றனர். சனிக்கிழமையன்று செங்கப்பள்ளி சொர்ண மஹாலில் தியாகிகள் சோமு - செம்பு, குமார் நினைவு வளாகத்தில், தோழர் சீத்தாராம் யெச்சூரி நினை வரங்கில் பிரதிநிதிகள் மாநாடு நடைபெறுகிறது. பொதுச்  செயலாளர் ஸ்ரீஜன் பட்டாச்சார்யா மாநாட்டைத் தொடக்கி வைத்துப் பேசுகிறார். மாலையில் மாநாட்டு வளாகத்தில் நடைபெறும் சிறப்புக் கருத்தரங்கில் மூத்த பத்திரிகையாளர் ஆர். விஜய சங்கர், ‘வகுப்பறைகளும், வகுப்புவாதமும்’ என்ற தலைப்பிலும், மாணவர் சங்க மாநில முன்னாள் செயலாளர் எஸ். கண்ணன், ‘வணிகமயத்திற்கு எதிரான  இயக்கம்’ என்ற தலைப்பிலும் கருத்துரை ஆற்றுகின்றனர்.  நிறைவு நாளான ஞாயிறன்று பாடல் வெளியீடு,  புத்தக வெளியீடு நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாநாட்டை நிறைவு செய்து அகில இந்தியத் தலைவர் ஆதர்ஷ் எம்.சாஜி உரை யாற்றுகிறார்.