மேற்கு வங்கத்தில் இந்திய மாணவர் சங்கம் பிரம்மாண்ட பேரணி
மேற்கு வங்க மாநிலம் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் கடந்த வாரம் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் பிரிவு குண்டர்கள் இந்திய மாணவர் சங்க தலைவர்கள், உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலை கண்டித்து, மாநில கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரியும் இந்திய மாணவர் சங்கம், சுகாந்த சேது முதல் ஜாதவ்பூர் காவல் நிலையம் வரை பிரம்மாண்ட பேரணியை நடத்தியது. இந்தப் பேரணியில் சிபிஎம் மேற்குவங்க மாநிலச் செயலாளர் முகமது சலீம் பங்கேற்றார்.