முழுமை அடையாத சாலைப் பணி: சிபிஎம் நூதனப் போராட்டம்
திருத்துறைப்பூண்டி, செப். 15- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி அத்திமடை முதல், தேசிங்கு ராஜபுரம் வரை நடைபெற்ற சாலைப் பணி, முழுமை பெறாமல் வாகன ஓட்டிகளுக்கு விபத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும், அரசு திட்டத்தில் வீடு கட்டிக் கொடுப்பதாக சிமெண்ட், கம்பி, பணம், ஏமாற்றும் ஒப்பந்தக்காரர்கள் மற்றும் நிர்வாகத்தை கண்டித்தும், அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கவும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ள னர். மேலும், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பாடை ஊர்வலம், முள்ளூர் துவங்கி பாமணி கடைவீதி வரை நடை பெற்றது. நிகழ்வில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். வி.ச. ஒன்றியச் செய லாளர் எஸ். முத்துச்செல்வன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.ஜோதி பாசு, திருத்துறைப்பூண்டி ஒன்றியச் செய லாளர் டிவி. காரல்மார்க்ஸ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கே. வேதரெத்தினம், விதொச. ஒன்றியச் செயலாளர் சி. வீரசேகரன் மற்றும் 500-க்கும் மேற்பட்ட தோழர்கள் பாடையை வைத்துக்கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து, காவல்துறை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு, கோரிக்கைகளை விரைந்து முடித்து தருவதாக கூறிய தால் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.